
இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை 5
கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர்
செம்மர
மரப்பாச்சி சோடி ஒன்றும்;
கருங்காலி மரப்பாச்சி சோடி ஒன்றும்;
உலா போகும் திருவீதி உலா!
வருடா வருடம்
பத்தே நாட்கள்
பட்டின பிரவேசம்
வெறும் பத்தே நாட்கள்!
பளபள பட்டு சட்டை
பட்டில் சரிகை தலைப்பாகை.
கருக்கரிவாளாய் முறுக்கிய மீசை!
பொன் மணியும்
மாணிக்க மணியும்
பரவலாய் பின்னின
சேலையும் ரவிக்கையும்;
ராசாதி ராசரை என்றும் பிரியாமல் இருக்கும்
பேரரசிகளும்
பெருமிதமாய், பதவிசாய் , கொலுவிருப்பர்!
ஆக:
அவர்களுக்கே முதல் தாம்பூலம்!
பொம்மைகளாய் இருந்தாலும்
அரசருக்கு உரிய
அனுபோகம் அவருடையதே!
வேறு எவர்க்கு?

One Comment on “சசிகலா விஸ்வநாதன்/மரப்பாச்சி”
Comments are closed.