
இணையக் கவியரங்கம் 17/10/25 – வாசித்த கவிதை – 4
கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர்
நிராகரிப்பின் துயரம்:
நான் அதை நன்கறிவேன்.
நுனி விரலால்
இலை முனைக்கு நகர்த்தும்
கருவேப்பிலை போல்;
கடித்த பச்சை மிளகாயை,
நாகரிகமாக துப்புவது போல்;
மூலையில் இருத்தப் படும் வாரியல் போல்;
நாசூக்காக நிராகரிக்கப்பட..
மனம் ஆம்பல் போல் கூம்பும்.
தொட்டாற் சிணுங்கி என, சுருங்கும்.
புறங்கை கொப்பளத்தின் வேதனை அது.
நானே வாயால் ஊதிதான் ஆற்ற வேண்டும்.
விண்டுரைக்கவோ,
விழுங்கவோ ஏலாமல்
அரும்பும் கண்ணீரை
கவனிக்க, ஒரு மனதில்லாமல் போக;
கண் இமையா அமைய,
கண்ணீரை வெளியிடாமல் இருக்கும் கலை கற்று தேர்ந்துள்ளேன்!
கொடுமையடா; சாமி!

7bqcgw