டி.வி.ராதாகிருஷ்ணன் கவிதை வரிசை எண் 4

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை

கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர்

மனிதா..
உன் மீது எனக்குள்ள பாசம்
நீ அறிவாயோ?

பாலும், பழமும், தேனுடன்
குழந்தை பருவத்தில்
கொற்றவனாய் வளர்த்திட்டாய் என்னை
மகிழ்ச்சி கொண்டேன்

வாலிப வயதிலோ..விரைவு உணவென
கோக்,பிட்சா, பர்கர் எனத் தள்ளி
குப்பைக்கூடையாக்கினாய்

உயிர் குடிக்கும் மதுவை
உள்ளே செலுத்தியவாறு
கல்லைத் தின்றாளும்
செரிக்கும் வயதென
செப்பிக் கொண்டாய் ஆறுதலாய்

எனக்கு மூப்புண்டு..அறிவாயா?
அத்தனையும் தாங்கிய
அடித்தளம்
அழிந்தது முற்றிலும்

மரண அழைப்பு வந்தது
புற்றெனும் பெயரில்
சென்றிடுவோம்..வந்திடு
என்றும் நீ என்னோடுதான்

டி.வி.ராதாகிருஷ்ணன் கவிதை வரிசை எண் 3 – விருட்சம் நாளிதழ்

One Comment on “டி.வி.ராதாகிருஷ்ணன் கவிதை வரிசை எண் 4”

Comments are closed.