க.சோமசுந்தரி/ சாதகப் பறவையாய்

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை – 4

கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர்

அத்தனை
விழி அசைவின்
அபிநயங்களிலும்..?!!
முத்திரையின்றி
ஜதி சேராத…
நர்த்தனமாய் தான்
தனியே நிற்கிறது…?!
உந்தன் நாதம்!!

தடாகத்தின் நீர் பரப்பில்
பூத்திருக்கும்….
தாமரை இதழில்
உருண்டோடும்
ஒரு துளியாய்… தான்
எப்போதும்… ஒட்டாமல்
விலகி நிற்கிறாய்!…

மௌனத்தின் ஆணி வேராய்…
பற்றி இருக்கும்…
உந்தன் வேள்வி தீயில்
நித்தமும்…நான்
கருகுவதை… நீ
அறியவில்லை போலும்…?!

“தரிகிடதோம்… என நாட்டியமாடும்
உன் மனதிற்கு தெரியாது.?

எந்த ஜென்மத்திலாவது
மழைத்துளியாய்!!
வருகைத் தரும்
உன் வரவிற்காய்
காத்திருக்கும்…
சாதகப்பறவை நான்
என்று…!!

க.சோமசுந்தரி./அனுதினமும் – விருட்சம் நாளிதழ்

One Comment on “க.சோமசுந்தரி/ சாதகப் பறவையாய்”

Comments are closed.