இணையக் கவியரங்கம் 17/10/25 – வாசித்த கவிதை
கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர்

பதங்கமாகும் சொற்களுக்குள்
மௌனமாய் உறைந்து நிற்கிறது
கேட்கப் படாத ஒரு பாடல்!!
வாசலற்ற பயணத்தின் முடிச்சுகளில்
தயங்கிப் படி மிதக்கிறது
கரை தெரியாத ஆகாயத்தாமரை!
விழியற்ற பார்வைக்குள் மனம்பேசும்
சைகை மொழியில் புரிகிறது
வாழ்வின் ருசி !
பிரித்துப் பார்க்க இயலாத
இருளின் நீட்சியில்
நிசப்தமாய் ஒளிர்கிறது
நிறமாலையின் அடர்வு!
தீராத வரிகளுக்குள்
இப்படித்தான்….
நினைவற்று நிற்கிறது
எழுத முடியாத ஒரு கவிதை!
சூட்சமத்தின்
மொத்த புள்ளியிலும்
காத்திருக்கும் காலத்திற்கு
மட்டும் தெரிகிறது?
கடக்கும் பாதையில்
வழிப்போக்கனாய் திரியும் …
அன்பிற்கும் மட்டும்
அடைக்கும் தாழ் இல்லையென்று?

Thank you so much sir