இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை
கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர்
6..மூங்கில் காட்டில்
காத்து இருக்கின்றன?
மௌனத்தை… மொழிபெயர்க்க
சில புல்லாங்குழல்கள்!!
7.வெப்ப கண்ணீரில்
உப்புக் கரிக்கிறது
நெய்தல் நிலத்து
பெண்ணின் வாழ்வு!
8.ஞானம் பெற்ற
புத்தருக்கு தெரியவில்லை
வாழ்வின் பயணத்தில்
யசோதையின் கண்ணீர்த்துளி!
9.பேசாத சொற்களின்
அடர்த்தியில் நிற்கிறது
உடைந்து விடாத
உறவுகளின் பாலம்!
10.சாய்வு நாற்காலி
ஓய்வுப் பெற்றது
வெற்றிடமாய் போன
அப்பாவின் மரணம்.
