
இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை 6
வரவிருக்குது யுத்தம்
நான் எந்த ஆயுதம்
எடுக்க வேண்டுமென்று
என் எதிரி தீர்மானிக்கிறான்
யார் எனக்கு எதிரி
எப்போதும் நானே
தீர்மானிக்கிறேன் அது.
தேசபிதாவுக்கு மாலைபோட
மண்டை உடைந்தது.
நீயா அது நானா
சண்டை ஏனாம்
சரியாப் போச்சு
பாற்கடலைக் கடைந்த போதே
பங்கிடுதலில் கோளாறு
வேண்டும் ஒரு
விசாரணைக் கமிஷன் அது.
இல்லாத ஒன்றை
இருப்பதாய்ச்சொல்லு
இருப்பதொன்றை
இல்லாததுவாய்ச்சொல்லு
உள்ளதைப் சொல்பவன்
உட்கார்ந்திருக்கட்டும்
சும்மா இருந்தானே…..
உண்மையின்
கால்களைச்சிதைத்துப்
பொய்மைக்குச் சிறகு
செய்யும் தருணம் அது.
