வளவ.துரையன்/ மழை

17-1025-அழகியசிங்கர் நடத்திய கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 4

தேர்ந்த மட்டைக்காரன்
ஆறு அடிப்பது போல
வேகமாகக் கொட்டாமல் பெய்கிறது மழை.
இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டாலும்
செல்லமாய்ச் சிணுங்கும் குழந்தைபோல்
கொஞ்சுகிறது.
மெல்லிய நீர்க்கோடுகள் மேலிருந்து
விழும்போது கண்கள் சிரிக்கின்றன.
தூண்களுக்கிடையே சிறுவர்
ஓடிப்பிடித்தாடுவது போல
மழைத்தாரைகளுக்கிடையே பட்டபூச்சிகள்
பறப்பது பார்த்துக் கொண்டே
இருக்க வைக்கிறது.
ஒருவேளை
அதிகமாகப்
பெய்தால் நமக்குத் தாங்காதென்று
அளவோடு பெய்கிறதோ?

வளவ. துரையன்/தேடுதல் – விருட்சம் நாளிதழ்

One Comment on “வளவ.துரையன்/ மழை”

Comments are closed.