வளவ. துரையன்/தேடுதல்

17-10-25 அழகியசிங்கர் நடத்திய இணைய வழிக்கவியரங்கில் வளவ. துரையன் வாசித்த கவிதை 3

நேற்றிலிருந்து நான் தேடிக்கொண்டிருக்கிறேன்
அப்பா கேட்டார்
“என்ன தேடுகிறாய்?
வண்டி சாவியா;
இதோ இருக்கிறது
அண்ணன் கேட்டார்
“நேற்றுப் படித்துப் பாதியில் வைத்த வெண்முரசு நாவல்தானே
தம்பி கேட்டான்
“கிரிக்கெட் பந்தா தேடுகிறாய்
தோட்டக் கதவின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறது
தங்கை கேட்டார்
“அந்தக் கோடுபோட்ட சட்டையா
அலமாரியில் பார்த்தேனே அங்கேதானே இருக்கும்
இல்லை இல்லை இல்லவே இல்லை

இவர்களுக்கு நான் எப்படி சொல்வது
என்னைத் தொலைத்துவிட்டுத் தேடுகிறேன் என்று

வளவ. துரையன் /ஓடுதல் – விருட்சம் நாளிதழ்

One Comment on “வளவ. துரையன்/தேடுதல்”

Comments are closed.