வளவ. துரையன் /ஓடுதல்

7-10-25 அழகியசிங்கர் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வளவ. துரையன் வாசித்த கவிதை 2

நான் ஓடிக் கொண்டிருக்கிறேன்
அதுவும் மிக விரைவான ஓட்டம்

திரும்பிப் பார்க்க்காமல் ஓடுகிறேன்.
திரும்பினால் ஓடாதே என்பர்.

எப்படியும் வேகமாக ஓடி என்னை
முந்திவிட எண்ணி அவர்கள் ஓடுகிறார்கள்.

நான் ஓட வேண்டாமாம்.
ஏன் தெரியுமா?

நான் வளைந்து வளைந்து ஓடுகிறேனாம்
நான் தத்தித் தத்தி ஓடுகிறேனாம்
நான் திணறித் திணறி ஓடுகிறேனாம்.

அவர்களைச் சேர்ந்தவர்களும்
நான் ஓடும்போது
இரு பக்கங்களிலும் நின்றுகொண்டு
கைகொட்டிச் சிரிக்கிறார்கள்.

என்ன வேண்டுமானாலும்
எப்படி வேண்டுமானாலும்
சொல்லட்டும்.
நான் ஓடிக் கொண்டிருக்கிறேன்

வளவ.துரையன் /அக்டோபர் 17 – விருட்சம் நாளிதழ்