
17-10-25 விருட்சம் அழகியசிங்கர் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 1
இன்று அவன் இறந்தநாளாம்
யார் சொன்னது?
எங்கே அவன் இறந்தான்?
என்னுள்ளே வாழ்கிறான்
பாரதி பாரதிதாசனுக்கும் முன்னால்
என்னைக் காந்தம்போல் கவர்ந்தவன் ஆவன்
தமிழன்னை அவனைத் தென்றல்போல்
தீண்டியதால் ஆவன் அவன் தென்றல் நடத்தினான்
நான் சேரும் கட்சிகளின் கொள்கைகள் மாறும்போது
நானும் மாறுகிறேன் என்றான்
ஜனாதிபதிபோல சம்பளம் வாங்கினாலும்
இந்தியாபோலக் கடன் வாங்கியவன்
சிவகங்கைச் சீமையிலே சிறப்பாக வாழ வேண்டியவன்
கவலை இல்லாத மனிதன் எடுத்துக் கவலைகளில் ஆழ்ந்தான்.
இருக்கும்பொழுதே தனக்கு இரங்கற்பா பாடிய ஒரே கவிஞன்
அவன் குடும்பம் சற்று பெரியதுதான்
ஆமாம்
தமிழ்க்குடும்பமே அவன் சேர்த்து வைத்த சொத்து
அவன் தலையெழுத்தை மாற்றியது “க”
என்ற குறிலெழுத்தும்
“கா” என்ற நெடிலெழுத்தும்
அவன் இன்று குடியிருப்பதும்
“க” என்ற எழுத்தில்தான்.
வாழட்டும்!
வாழட்டும்।

One Comment on “வளவ.துரையன் /அக்டோபர் 17”
Comments are closed.