சோமசுந்தரி.G/சங்கு பூவின் நிறமாய்….

படிந்த வார்த்தைகளை
எடுத்து வர்ணம் பூசுகிறேன்!
சங்கு பூவின் நிறமாய்
மிக அணுக்கமாய்
நெருங்கி வருகிறது
தொடுவானம்!

பிடித்த பூவில்
எந்த பூவாய் இருப்பது ?
யோசித்து கொண்டே
மலர்ந்து விடுகிறது
அந்தியில் மந்தாரை பூ !

சாமரம் வீசும் காற்றில்
பறந்து விழும்
மயில் பீலியில்
தெரிகிறது
உபரியாய் நிற்கும்
குயிலின் ஓசை!

இப்படித்தான்…
வெளிப்படாத வெற்றிடத்தில்
கரைந்து…நின்று
வேடிக்கை காட்டுகிறது
எழுதப்படாத ஒரு கவிதை!

எல்லாவற்றையும் தேடிக் களைத்த பயணத்தில்…
தவிர்க்கவே முடிவதில்லை ?

இயல்பு மாறாமல் சிரிக்கும்
இந்த பூக்களையும்…!
உண்மையாய்
உயிர்க் கூட்டை
நிறைக்கும்
சில பிரியங்களையும்…!

17-10-25 விருட்சம் அழகியசிங்கர் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வாசித்த கவிதை 1

One Comment on “சோமசுந்தரி.G/சங்கு பூவின் நிறமாய்….”

Comments are closed.