
இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை 2
கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர்
பேசுவதற்கு
ஒன்றுமில்லை
எனத் தெரிந்த
பின்னும்…
இயல்பற்ற
ஓர் அன்பை
வெற்று
நம்பிக்கையாக்கி
நெடுங்காலமாய்…
சாலையோர
சுமைதாங்கி
கல்லுக்குள்
மௌனமாய்…
பூத்திருக்கும்
எருக்கம் பூக்களின்
தவம் தான் என்ன?
