
இணையக் கவியரங்கம்
17/10/25 எஸ்ஸார்சி வாசித்த கவிதை
இந்தியா என் தாய்நாடு
ஒரே நாடுதான் இது
பணக்காரர்கள் மேலும்
பணக்காரர்கள் ஆவதும்
ஏழைகள் மேலும்
ஏழைகள் ஆவதும்
அரங்கேறுகிறது அன்றாடம்
குடிகாரர்கள் கூடிப்போகிறார்கள்
எண்ணிக்கையில்
பள்ளிச் சிறுவர்கள் பிஞ்சுக் கைகளில்
போதைப்பொருள் பொட்டலங்கள்
மகளிர் சமூகத்தில் நிம்மதி தொலைத்து
எத்தனையோ காலமாயிற்று
மனிதனாக வாழத்தெரியாத நமக்கு
சந்திரனுக்குப் போய் குடியிருக்க ஆசை
தேர்தல் நெருங்கி வர வோட்டுக்கு
எவ்வளவு பணம் தேரும்
அதே நினைப்புத்தான்
உறக்கம் வரவில்லை.

One Comment on “எஸ்ஸார்சி/தினம் தினம் 1”
Comments are closed.