இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை 2

குழந்தைகளைப் பள்ளிகளில்
கொண்டுபோய்ச்
சேர்க்கிறார்கள்
பள்ளிகளில் தான் எத்தனை வகை
அரண்மனை வாசிகள் தொடங்கி
அன்றாடம் காய்ச்சிகள் வரை
ரகம்ரகமாய்ப் பள்ளிகள்
படிப்பு முடித்து வரும் பிள்ளைகள் எல்லோரும்
சகோதரர்களாம்
அப்படிச் சொன்னால் நகைப்புக்குத் தானிடம்.
சமூகம் பிரிந்து பிரிந்து
கிடப்பது போல்
கல்வி நிலையங்களும் தான் இந்தியர் யாவரும்
உடன் பிறந்தோர் முழங்கியது பழங்கதை
பள்ளிகளில் அது உறுதிமொழியாயில்லை
கல்வியில் தாராளமயம்
அரக்கனாய் அனுபவமாகிறது வெள்ளைத் தாமரை
வீற்றிருப்பவள் மெள்ள மெள்ளப் போகிறாள்
வேறிடம் காத்துக்கிடக்கின்றனவே
கொள்ளையர்களின் கல்விக்கூடங்கள்.
