டி.வி.ராதாகிருஷ்ணன் கவிதை வரிசை எண் 1

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை

கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர்

உயர்ந்தோர் தாழ்ந்தோர்
பேதமில்லை
மச்சு வீடு, குச்சு வீடு
பாகு பாடில்லை

செய்த பாவம் தீர
இறை வழிபாடில்லை
மெய்யைப் பொய்யாக்க
நீதிமன்றங்கள் இல்லை

உண்டு உண்டு உறங்கும்
சோம்பேறிகள் இல்லை
ஒருவருக்கொருவர்
கூழைக் கும்பிடு இல்லை

பதவிக்காக தலைவர்
புகழ் பாடுவதில்லை
ஐந்தறிவு படைத்தவர் நாங்கள்
ஆறறிவு எங்களுக்கில்லை

One Comment on “டி.வி.ராதாகிருஷ்ணன் கவிதை வரிசை எண் 1”

Comments are closed.