
இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை
கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர்
‘இல்லை’ என்பதும்;
‘இருக்கு’ என்பதும்,
இறையைப் பற்றியதே!
இறைஞ்சுவோர்க்கும்
இறைஞ்சா பேருக்கும்,
மறை பொருள்;
இருபாலாரையும் கடந்து
நிற்பதாலன்றோ; அது கடவுள்!
அது:
குறை ஒன்றும் இன்றி
பாகுபாடன்றி
அருளுவதாலேயே;
சிலர்
‘இறை’என்று இயம்பி
கை எடுக்கிறோம்?
சிலர்
கை கட்டி நானே எதுவும்;
என் செயலே எதுவும்;
என்று தன்னிலையில்
நிலைத்து நிற்கிறோம்?
கற்பனையும் கதையும் இல்லா
அதைத் தேடித்தான்
நானும் அலைகிறேன்.

One Comment on “சசிகலா விஸ்வநாதன்/இறை 1”
Comments are closed.