
இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை 1
மழை பெய்தது
தெரு நனைந்து மிதக்க
இரண்டு பூனைக்குட்டிகள்
இடுக்கில்
குளிருக்குப் பயந்து
தாய் மடியில் பதுங்க
தாய்ப்பூனை
குட்டிகளைப் பற்றி யோசனையில்
கீழே
அப்பா
பாட்டி
தம்பி மூவரும் டிவியில்
துருப்பிடித்த சைக்கிளை
எடுத்தேன்
மழை விட்டிருந்தது
என் குழந்தைகளைப் பார்க்க......

One Comment on “அழகியசிங்கர்/ மழை 1”
Comments are closed.