விஜயலக்ஷ்மி கண்ணன்/அப்பாவின் பொக்கிஷம்

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை 1

அந்தக் கால ஹிட்டாச்சி டிரான்சிஸ்டர்,
அப்பாவின் அருமைப் பொக்கிஷம்.

உண்ணும் போது அருகிலும்
உறங்கும் போது மார்பிலும்,
தனி சிம்ஹாசனம்
பிடித்த ரேடியோ பெட்டி ஜப்பான் இறக்குமதி.

அப்பாவின் இறுதி நேரம்,
யார் கைப் பட்டதோ தெரியவில்லை,
‘ ஓ ‘ என்று அலறி அழுதது ,இனி அவர்
கைப் படாது என்பதாலோ?

One Comment on “விஜயலக்ஷ்மி கண்ணன்/அப்பாவின் பொக்கிஷம்”

Comments are closed.