விஜயலக்ஷ்மி கண்ணன்/என்னைக் கொடுத்தேன்

இணையக் கவியரங்கம் 17.10.25 அன்று நான் வாசித்த கவிதை 2

மலர்களின் சிரிப்பில்
மங்கையவள் முகம் கண்டேன்.

மண்ணின் வாசனையில்
அவள் தென்றலாக வீசக் கண்டேன்.

இருளில் அவள் முத்துப் பற்கள்
அரும்பென விரியக் கண்டேன்.

நிலவொளியில் அவள் கண்களில்
கண்டேன் காந்தப்
பார்வை.

என்னை மறந்தேன்
எல்லாம் துறந்தேன்
கள்ளி அவளிடம்
என்னையே hகொடுத்தேன்.

விஜயலக்ஷ்மி கண்ணன்/அப்பாவின் பொக்கிஷம் – விருட்சம் நாளிதழ்