வி.வி. கலைச்செல்வி/பேசியதை கொஞ்சம் யோசி

எல்லோரும் என்னிடம் நடிக்கிறார்கள்
என்று சொல்லிக் கொண்டிருந்தேன்
என் தோழியிடம்
அவள் ஆம்
நான் உட்பட என்றாள்
எனக்குத்தான் நடிக்கத் தெரியவில்லையா.?
என்று மறுபடி கேட்டேன்
அப்படியெல்லாம் இல்லை
உனக்கு நன்றாக
நடிக்கத் தெரியவில்லை
உண்மையிதுதான்
புரிந்து கொள் என்கிறாள்