இணையக் கவியரங்கம் 17/10/25 எஸ்ஸார்சி வாசித்த கவிதை 3

சரவணபெலகெலா
சென்று பார்த்தேன்
பெங்களூரு விலிருந்து
நூற்றைம்பது கிலோமீட்டர்
மேற்கில் பயணித்து.
மங்களூர் செல்லும் தார்ச்சாலை
தென்னை மரங்கள் பாக்குத் தோட்டங்கள் இடை இடையே
எழுநூற்று ஐம்பது கல்படிகள் கொண்ட குன்றின் மீது கால்களில் செறுப்பின்றி செங்குத்தான ஏற்றம் வெயில் இல்லா நேரம்
காற்று வீசி அடிக்கா நேரம்
மழைபெய்யா நேரம்
வேண்டும் இவை முக்கியமாய் கோமதீசன் சிலை அறுபதடிக்கு அம்மணமாய் நிற்கிறது
உச்சியில்
ஆயிரம் ஆண்டுகள் உருண்டோடி விட்டன எல்லாம் கடந்த மனிதர்க்கு இடைத்துணி
தேவையில்லை தான்
எதையும் இழக்க மனமே ஒப்பா நாங்கள் சுற்றி வந்து வணங்கி நின்றோம்
உடன் வந்த பேரக்குழந்தை
உச்சா சாமிய பார்த்தாச்சு என்றான்
மீண்டும் எழுநூற்றுஐம்பது படிகள்
மலை இறங்கி மூச்சு முட்ட
முடிக்கவேண்டும் புனிதப்பயணம்.

One Comment on “எஸ்ஸார்சி/சரவணபெலகெலா”
Comments are closed.