இணையவழிக் கவியரங்கில் 17.10.2025 அன்று வாசித்த கவிதை 3

பிள்ளைப் பருவத்தில் தன்னையும்
அறியாமல் எதிர்பார்ப்பு
அன்னையின் அரவணைப்பு,
அவளூட்டும் பாலும்.
பள்ளி பிராயத்திலே
நண்பர்களோடு விளையாட்டு.
பதின் வயதுகளில் அழகின் மோகம்.
இளமை எட்டிப் பார்த்தவுடன்
மாறிய எதிர்பார்ப்பு.
அழகி ஒருவள் கண்ணில் தெரியவேண்டும்.
காதலில் அவளுடன் மயங்கவும் வேண்டும்.
காதல் கனிந்ததும்
வேறுபடும் எதிர்பார்ப்புகள்
குடும்பம்,பிள்ளைகள் என்று.
உழைத்து செல்வாக்கும் சொல்வாக்கும்
சம்பாதித்து கோட்டைக் கட்டும் காட்சி.
மீண்டும் காலச் சக்கரம் சுழன்று
எதிர்நோக்கும்
பிள்ளைகளின் அன்பு,
மூப்பில் எதிர்பார்க்கும் ஏக்கத்தோடு.
உடல் மெலிந்தும்
உள்ளம் சோர்ந்துவிடாமல்
இறுதி யாத்திரையின் எதிர்பார்ப்பு.

One Comment on “விஜயலக்ஷ்மி கண்ணன் / எதிர்பார்ப்பு”
Comments are closed.