
24.10.2025
ஆசிரியர் பக்கம்
மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
மோகினி: வணக்கம்.
அழகியசிங்கர் : வணக்கம்.
ஜெகன் : சமீபத்தில் நீங்கள் ஒரு தீபாவளி மலர் கொண்டு வந்தீர்கள் போலிருக்கிறது.
அழகியசிங்கர் : தப்பாகச் சொல்கிறீர்கள். நாங்கள் ஒரு தீபாவளி மலர் கொண்டு வந்துள்ளோம்.
மோகினி : நாங்கள் என்றால்?
அழகியசிங்கர் : குவிகம், விருட்சம், பூபாளம் என்ற மூன்று பத்திரிகைகள் சேர்ந்து கொண்டு வந்துள்ளோம்.
மோகினி : புதுமையாக இருக்கிறது. அதன் தரம் எப்படி இருக்கும்.
அழகியசிங்கர் :தீபாவளி மலரில் எழுதுபவர்கள் எல்லாம் எழுதிக்கொண்டிருப்பார்கள். படிப்பவர்கள் படித்துக்கொண்டிருப்பார்கள்.
ஜெகன் : இலக்கியத் தரமாக இருக்குமா?
அழகியசிங்கர் : அது மாதிரி இருக்கக் கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம்.
மோகினி : போன முறை 30 புத்தகங்கள் கொண்டு வந்தீர்கள். இந்த முறை எத்தனைப் புத்தகம் கொண்டு வர உள்ளீர்கள்.
அழகியசிங்கர் : இந்த முறையும் கிட்டத்தட்ட 30 புத்தகங்கள் கொண்டு வருவதாக உத்தேசம். நிறையப் புத்தகங்கள் அச்சடித்துக் கொண்டிருக்கிறேன்.
மோகினி : இந்த முறை உங்கள் சிறுகதைத் தொகுதி வர உள்ளதா?
அழகியசிங்கர் : இன்னும் ஒன்றிரண்டு கதைகள் எழுதினால் என் எண்ணம் நிறைவேறும்.
ஜெகன்: நீங்கள் கொண்டுவரப் போகும் உங்கள் சிறுகதைத் தொகுப்புக்கு, ரவி பேலட்டையை எல்லாக் கதைகளுக்கும் வரையச் சொல்லலாம்.
அழகியசிங்கர் : அது சாத்தியமா என்று தெரியவில்லை.
மோகினி : நீங்கள் இப்போது கொண்டு வருகிற புத்தகங்களில் எதை முக்கியமாகக் கருதுகிறீர்கள்.
அழகியசிங்கர் : ரஸவாதியின் ஆதார ஸ்ருதி என்ற நாவலை.
மோகினி : கூட்டம் நடத்த உள்ளீர்களா?
அழகியசிங்கர் : ஆமாம். நவம்பர் 4ஆம் தேதி.
ஜெகன் : வாழ்த்துகள்.
மோகினி : இரவு 11 மணி ஆகிவிட்டது. கூட்டத்தை முடித்துக் கொள்ளலாம்.
அழகியசிங்கர் : குட் நைட்.
(இரவு 11 மணி)

One Comment on “அழகியசிங்கர்/ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 99”
Comments are closed.