ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில்/அழகியசிங்கர்

ஆசிரியர் பக்கம்

மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
 மோகினி: வணக்கம்.
அழகியசிங்கர் : வணக்கம். 
ஜெகன் : நிறையா புத்தகங்கள் கொண்டு வருகிறீர்கள் போலிருக்கே?
அழகியசிங்கர் : ஆமாம்.
மோகினி :  முக்கியமான புத்தகம் எது?
அழகியசிங்கர் : ஆதார ஸ்ருதி.  ரஸவாதி பரிசு வாங்கிய நாவல்.
மோகினி :  விருட்சம் கொண்டு வந்து விட்டீர்கள் போலிருக்கு.
அழகியசிங்கர் : விருட்சம் 131வது இதழ்.  இந்த இதழும் கதைகள்.
ஜெகன் :  போட்டிக்கு அனுப்பிய கதைகள் தானே
அழகியசிங்கர் :  ஆமாம். புத்தகத்தில் ஏற்கனவே வந்த கதைகள் என்று சொல்லக் கூடும். ஆனால் விருட்சம் பத்திரிகையில் வந்தால் ஆயிரம் பேர்கள் படிப்பாரகள்.
மோகினி :  முன்புபோல் ஓடி ஆடி செய்ய முடிகிறதா?
அழகியசிங்கர் : ஓடவும் முடியவில்லை. ஆடவும் முடியவில்லை.  எல்லாம் நிதானமாகத்தான் செய்ய முடிகிறது.
மோகினி :  இப்ப நீங்கள் படுகிற அவஸ்தை எது.
அழகியசிங்கர் : ஒன்றா இரண்டா எல்லாவற்றிலும் ஒருவிதத் தடுமாற்றம்.
ஜெகன்:  வயது அதிகமாகிவிட்டது. 
அழகியசிங்கர் : இந்த டிசம்பரில் 72.
மோகினி : என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
அழகியசிங்கர் : ஆதார சுருதி. ரமணர். யூஜி.
மோகினி : சமீபத்தில் 10 புத்தகங்களுக்காக அண்ணா நூலகத்தில் ஒரு கூட்டம் நடத்தினீர்கள் போலிருக்கு
அழகியசிங்கர் : ஆமாம். 7 சிறுகதைகள். ஒரு நாவல், ஒரு கவிதைப் புத்தகம்.  ஒரு கட்டுரைப் புத்தகம்.
மோகினி : இரவு  9.30 மணி ஆகிவிட்டது. கூட்டத்தை முடித்துக் கொள்ளலாம்.
அழகியசிங்கர் : குட் நைட்.

                    (இரவு 9.39 மணி)

அழகியசிங்கர்/ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 99 – விருட்சம் நாளிதழ்