ரேவதி பாலு/குடும்பம்

கைக்குழந்தைக்கு பாலை கரைத்து பாட்டிலில் விட்டு தன் மடியில் வைத்துக்கொண்டு கொடுத்துக்கொண்டு இருந்த மனைவியிடம் பத்திரிகையில் வந்திருந்த அந்த படத்தை காட்டி அவளைச் சுட்டிக்காட்டி புன்னகை த்தான் ராம்.
குழந்தை பால் குடித்து முடித்ததும் அவனிடமிருந்து அந்த பத்திரிகையை வாங்கி மேஜை மீது இருந்த பேனாவால் அந்தப் படத்தில் திருத்தங்கள் செய்தாள்.
முதல் இரண்டு கைகளுக்கு ராம் என்று பெயரிட்டாள். இரண்டாவது ஜோடி கைகளுக்கு குமுதா என்றும் மூன்றாவது ஜோடிக்கு சதீஷ் என்று மகனின் பெயரை எழுதிவிட்டு நான்காவது குட்டி கரங்களாக போட்டு அதற்கு கைக்குழந்தை கலாவின் பெயரை எழுதினாள். ஐந்தாவதாக கடைசி ஜோடி கரங்களுக்கு தங்கள் வீட்டில் வேலை செய்யும் முனியம்மா பெயரை போட்டு, அந்தப் பெண் உருவத்தின் மத்தியில் குடும்பம் என்று எழுதி இந்த பத்து கரங்களும் இணைந்தது தான் இந்த குடும்பம் என்று சிரித்துக் கொண்டே அவனிடமே கொடுத்தாள்.
முனியம்மா வந்து பாத்திரம் துலக்கி வீடு பெருக்கி துடைக்க ராம் வாஷிங் மெஷினிலிருந்து இருந்து துணிகளை எடுத்து உலர்த்தினான் . சதீஷ் சாப்பாட்டு மேஜையில் அம்மா சமைத்து வைத்திருந்ததை எடுத்து வைத்தான். பள்ளிக்கு தேவையானது தானே பார்த்து எடுத்துக்கொண்டு வாசலில் வந்த வேனில் ஏறிக்கொண்டான். எல்லோரும் ஏதோ பிஸியாக செய்து கொண்டிருக்கிறார்களே என்று தானும் தன் பங்கிற்கு ஹாலில் தத்தக்கா பித்தக்கா என்று நடந்து கொண்டிருந்த கலாவை ராம் தூக்கி கொள்ள, அலுவலகத்திற்கு ரெடியாகி வந்த குமுதா வாசலுக்கு வந்த ராமுடன் பைக்கில் ஏறிக்கொண்டாள் குழந்தையை வாங்கி கொண்டு .
அவள் அலுவலகத்திலேயே காப்பகம் இருக்கிறது குழந்தையை விடுவதற்கு.குடும்பம்