மீரா பார்த்தசாரதி/அஷ்டாவதானி

எழில் குழந்தைக்கு பால் புகட்டியவாறே… கணினியில் தேவையான விவரங்களைச்
சேகரித்தாள்.
மாமா… இந்தாங்க இந்த மாதச் செலவுக்கான பணம்..வரவுல வச்சிட்டு… பிளான் பண்ணுங்க…
அத்தை சமையலறை உங்க டிபார்ட்மெண்ட் இல்லையா… மளிகை, காய்கறிகள்… குழந்தைகளுக்குத் தேவையான சத்துணவு மற்றும் சாயங்கால ஸ்நாக்ஸ் எல்லாம் மாமாவோட கலந்தாலோசித்து பிளான் பண்ணுங்க….
லட்சுமி….வீடு சுத்தம் பண்ணத் தேவையான சாமானெல்லாம் சரி பார்த்து..மாமாகிட்ட லிஸ்ட் கொடு…. வாஷிங் மெஷினில் துணி இருந்துச்சே காய வைச்சுட்டியா?
குழந்தைங்க பெட் துணி… சோஃபா கவர்..ஸ்கீரின் எல்லாம் எடுத்திட்டு தனித்தனியா சுத்தமா துவைச்சிடு..வேலைய வேகமா முடிக்கறேன்னு எல்லாத்தையும் மொத்தமாப் போட்டுடாத.
எழிலின் உடலில் திடீரென ஒரே நேரத்தில் எட்டு கைகள் முளைத்து…அவரவர் வேலையைச் சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தன.
ஆனாலும்.. இந்த எழில் உன்னையும்,அவளோட மாமியார்,மாமனாரையும் ஆட்டித்தான் படைக்கிறா…இரக்கப்படுவது போல் பேசிய பக்கத்து வீட்டுக்காரியிடம்….
சும்மாவா…இந்தச் சின்ன வயசுல குடிகாரப் புருஷன மறுவாழ்வு மையத்துல சேர்த்திட்டு..
குழந்தைகள் காப்பகம் நடத்தி…அது படற கஷ்டம்… ஊம்…பெருமூச்செறிந்தவள் சொன்னாள்… ஒண்ணு தெரியுமா..அவங்க எழிலோட மாமனார்,மாமியாரே கெடையாது.
எழிலம்மா… தன்னை அண்டினவங்கள வாழ வைக்கிற தெய்வம்…எங்களோட குலதெய்வம்…குரல் கமறச் சொன்னாள் வேலைக்காரி லட்சுமி.

அழகியசிங்கர்/அவள் மட்டும்தான் – விருட்சம் நாளிதழ்

நாகேந்திர பாரதி/கை ஓட்டம் – விருட்சம் நாளிதழ்

சசிகலா விஸ்வநாதன்/துரியா – விருட்சம் நாளிதழ்

விஜயலக்ஷ்மி கண்ணன்/பெண் என்றும் அட்டாவதானி – விருட்சம் நாளிதழ்

One Comment on “மீரா பார்த்தசாரதி/அஷ்டாவதானி”

Comments are closed.