விஜயலக்ஷ்மி கண்ணன்/பெண் என்றும் அட்டாவதானி

கமலா காலை எழுந்தவுடன் அன்றைய வேலைகள் கண் முன் கதக் நாட்டியம் ஆட தொடங்கிவிட்டது.
அவள் சில காலம் கதக் பயின்று இருந்தாள்.நின்ற இடத்திலேயே சுற்றுகள் போட்டவண்ணம் முத்திரைகள்.
அன்று ஆரம்பித்த சுற்றல் இன்னும் தீவிரம் அடைந்து தலையை சுற்ற வைக்கிறது. கமலா முதல் வேலையாக தன் ஆறு மாத குழந்தைக்கு புட்டிப் பால் கொடுக்கணும். குழந்தை பசியில் அழுதால் அவள் கணவன் பெயருக்கு ஏற்றார்ப்போல் ருத்ரமூர்த்தி ஆடுவான்.
நேற்று இரவே வாஷிங் மிஷினில் துவைத்தவை காய வைக்கவேண்டும்.
கணவனுடைய சட்டையை இஸ்திரி போடணும்.
இதற்கு நடுவே கீரை வாங்கியது ஆய்ந்து 6மசிக்கணும், தாளிக்கணும்.
மாமியார் சொல்படி வெள்ளிக்கிழமை என்றால் கீரை சமைக்கணும். இல்லை என்றால் வீடு இரண்டுபடும்.
வீடு கூட்டி கல்லுப்பு போட்டு தரை மொழுகணும்.
பத்து மணிக்குள் இந்த வேலை எல்லாம் முடிக்கணும்.
குழந்தையை தூங்க வச்சு மாமியார் பக்கத்தில் படுக்க வைத்து ஒரு நீண்ட பெரு மூச்சு விடத் தான் டைம் இருக்கும்.
கம்ப்யூட்டர் லாக் இன் பண்ண வேண்டும். ஒர்க் from ஹோம்.நடுவில் அரை மணி நேர பிரேக்.வயிற்றுக்கு உணவு அளித்து பிறகு மீண்டும் நான்கு மணி வரை கணினியுடன் சல்லாபம்.
இதில் வேறே,கமலா ஒரு வளர்ந்து மணம் பரப்பும் எழுத்தாளர்.
இன்று இரவு கண்டிப்பாக உட்கார்ந்து ஒரு அத்தியாயம் தொடர் கதையை எழுதியதும் தினமலர் பத்திரிகைக்கு அனுப்பிவிடலாம்.
இப்படியே மனக் கணக்கு போட்ட வண்ணம் கமலா ஒரு யந்திரம் போல் இயங்க லானாள்.

One Comment on “விஜயலக்ஷ்மி கண்ணன்/பெண் என்றும் அட்டாவதானி”

Comments are closed.