
ராதா வேலை முடித்த அசதியில் ஆட்டோ ஏறி உட்கார்ந்தாள் , அவள் தன் அலுவலக தெருவின் முனை திரும்புவதற்குள் ,அவளுக்கு ஒரு ஆடிட்டரிடம் இருந்து அழைப்பு “மேடம் ,வீட்டிற்கு சென்றதும் எங்களுக்கு அந்த பைலை அனுப்பிவிடுங்கள், நாங்கள் இன்றோடு உங்கள் கம்பெனி ஆடிட்டை முடிக்க வேண்டும் , நாளைக்கு நாங்கள் வர மாட்டோம் , உங்கள் கம்பெனி புதிதாக துவங்கிய கிளையின் கணக்கை தான் இப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என்றார் . அவளும் சரி என்று கூறி போனை வைத்துவிட்டு “பையித்தியக்காரங்க , பேக்கரி ய டெவெலப் பண்ணினாலும் பண்ணினோம் பண் வேணும் வெண்ணை வேணும் உயிரை வாங்கிறாங்க “ என்று புலம்பிக்கொண்டே ஆட்டோவில் சென்றாள் .
மனதிற்குள் அவள் “நல்ல வேளை காலை நாம் எழுந்திருக்கும் பெண்களின் மாதாந்திர வலி வந்ததால் , நம் கணவர் எல்லா வேலைகளையும் செய்திருப்பார் , இன்று போய் வெறும் இட்லி மட்டும் செய்து சாப்பிட்டு விட்டு , குழந்தைக்கும் ஏதாவது செய்துகொடுத்துவிட்டு ,இவர்கள் வேலையையும் முடித்துவிட்டு , 9 மணிக்கெல்லாம் தூங்க வேண்டும் ,கைப்பிள்ளை போல் “ என்று நினைத்துக்கொண்டே வந்தாள் .
அவள் தன் குழந்தையை டே கேரில் இருந்து அழைத்துக்கொண்டு வீடு திறந்து உள்ளே சென்றவளுக்கு பேரதிர்ச்சி .வீடு வீடாகவே இல்லை , எல்லா வேலையையும் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறிய கணவரிடம் கூப்பிட்டு சத்தம் போடவும் முடியவில்லை , ஏதாவது கேட்டால் “நீ சம்பாதிக்கிற திமிர் “ என்பார் , அவரிடம் பேசுவதற்கு பேசாமலே இருந்திருக்கலாம் ,” என்ன செய்வதென்று தெறியாமல் விழி பிதிங்கி நிற்க , எப்படி இருந்தாலும் நாம் தான் செய்யவேண்டும் என்று குழந்தைக்கு விளையாட்டு சாமான்கள் போட்டுவிட்டு , வீடை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள் . சரியாய் ஒரு மணி நேரத்தில் எல்லா வேலைகளும் முடிய , இப்பொழுது பாக்கி குழந்தைக்கு சாப்பாடு ஊட்டுவது , துவைத்த துணியை உலர்த்துவது , ஆடிட்டருக்கு பைலை அனுப்புவது , என்று ஒரு சில வேலைகள் பாக்கி இருக்கு , லேப்டாப் ஓபன் ஆகி அது நெட்ஒர்க் வரும் வரை அவள் ஒரு வாயும் அவள் குழந்தைக்கு ஒரு வாயும் ஊட்டினாள் . நெட் கனெக்ட் ஆகி ஆடிட்டிருக்கு மெயில் அனுப்பியதும் ,அவன் வேறு ஒரு சந்தேகம் கேட்க ,அவளுடைய அலுவலக பணி தொடர்ந்தது , கடுப்புடன் அவள் குழந்தைக்கு ஓடிக்கொண்டே லேப்டாபை தட்டிக்கொண்டிருந்தாள் , அவள் பொறுப்புணர்ச்சிக்கு அளவே இல்லை , கொஞ்சம் அசைந்திருந்தால் குழந்தையின் மூக்கில் இட்லி ஈஷப்பட்டிருக்கும் . ஆனால் குழந்தை மிகவும் சாமர்த்தியசாலி ,இந்த 2 வயதில் எவ்வளவு அறிவு ,அம்மாவின் கை வாட்டத்திற்கு ஏற்ப தன்னை உயர்திக்கொண்டும் குறுக்கிக்கொண்டும் இட்லியை வாயில் வாங்கிக்கொண்டது , எல்லாம் முடிந்த அவள் சாப்பிட்டு எழுந்திருக்க மணி 10. பிறகு துணியை உலர்த்திவிட்டு பாக்கி இருக்கும் வேலைகளை பார்க்கும் போது அப்பொழுதே 11 மணி தூக்கம் கண்ணை கட்டிவிட்டது ,மனதிற்குள் “நாம் என்று முடியவில்லை சீக்கிரம் தூங்க நினைக்கிறோமோ ,அன்றுதான் நிறைய நேரம் கண் விழிக்க வேண்டியிருக்கிறது, என்று வருத்தப்பட்டுக்கொண்டிருக்க “ , அவள் கணவரிடம் இருந்து போன் , “ராதா இன்று போல் நாளைக்கும் உனக்கு உதவி புரியட்டுமா ? என்று அவளுக்கு கோபம் அதிகமாக வந்தது ,திட்டுவதற்கு வாயை திறக்கும் போது , அவள் அம்மா சொன்ன வார்த்தைகள் அவளுக்கு ஞாபகத்திற்கு வந்தது ,அது என்னவெனில் “ராதா உனக்கு போன வாரத்திலிருந்து சனிப்பெயர்ச்சி ஆரம்பம் ஆகிவிட்டது ,எனவே வாயை திறக்காதே , நீ என்ன கூறினாலும் உனக்கு அது பிரச்னையாக முடியும் “என்பதே . எனவே அவள் ஒரு நிமிடம் நிதானித்துவிட்டு , நாளைக்கு இரண்டாம் நாள், இன்னும் உடம்பு வலி ஜாஸ்தி இருக்கும் , அவரை வேலை பார்க்க விட்டால் ,அதற்கு மேல் நாம் பார்க்க நேரிடும் , எனவே….என்ன செய்ய என்று யோசித்தவள் ,”கொஞ்சம் இருங்க , என்று கூறிவிட்டு , இதுக்கு பருத்திமூட்டை கோடௌன் லேயே இருந்திருக்கலாம் ல “ என்ற மெசேஜ் ஐ அனுப்பினாள் “……
இதை பார்த்த இரவு நேர பணிக்கு சென்ற அவள் கணவர் , நம் உதவியால் ராதா மிகவும் காயப்பட்டிருக்கிறாள் என்பதை உணர்ந்து அடுத்த நாளில் இருந்து அவளுக்கு உதவி புரிவதை நிறுத்திவிட்டார் ….
