
17-10-2025 அழகியசிங்கர் நடத்திய கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 5
இப்பொழுதெல்லாம்
நான் கோபத்தைக் குறைத்து விட்டேன்
பக்கத்து வீட்டு மரத்திலிருந்து
என் தோட்டத்தில் கொட்டும்
இலைகளைப் பேசாமல்
எடுத்துப் போடுகிறேன்
வாடிய பூக்களை வைத்துக்
கட்டிய மாலையை
புதிதென்று தருகின்ற பூக்காரியிடம்
சிரித்துக் கொண்டே வாங்கிகிறேன்
பிள்ளைகளின் மதிப்பெண்கள் குறைந்திருந்தாலும்
அடுத்த முறை அதிகம் என ஆறுதல் சொல்கிறேன்
பின்னால் வழிகேட்டு ஒலித்துக் கொண்டே
ஓயாத் தொல்லை தரும்
வண்டியைப் போகவிடுகிறேன்
புரியாத கவிதையையும் புரிந்ததுபோல
நடிக்கத் தொடங்கிவிட்டேன்

அருமை!