வளவ.துரையன்/காதலியும் கவிதையும்

17-10-25 அழகியசிங்கர் நடத்திய கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை.6

என் காதலியே!
உனக்கும் என் கவிதைக்கும் என்ன சண்டை?

ஏன் இருவருக்குள்ளும் இந்த ஏற்றத்தாழ்வு?
எப்படி வந்தது இந்த ஓயாப் பனிப்போர்?

கவிதையைக் கேட்டால் உன்
காதலியைக் கேள் என்கிறது.

உன்னைக் கேட்டால் கவிதையையே
காது கொடுத்துக் கேட்டுப் பார் என்கிறாய்.

என் மனத்தை இரு கூறாக்கி
இருவருக்கும் அளித்திருந்தேன்
சமபாகம்தான் உங்கள்
இருவருக்கும் தந்தேன்

ஆனாலும் எப்பொழுதும் என்ன
காதலி பற்றியே எழுதுகிறாய் கவிதையும்

கவிதையைக் கூட உறக்கத்திலே கனாக்கண்டு
பிதற்றுவதாகக் காதலியும் புகார்கள் சொன்னால்

நான் எவரை நேசிப்பது?
எவரை விடுவது?

வளவ.துரையன்/கோபம் – விருட்சம் நாளிதழ்

One Comment on “வளவ.துரையன்/காதலியும் கவிதையும்”

Comments are closed.