கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர்
இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை

7
கவலைகள்
சிக்கல்கள்
வேதனைகள்
நல்லவனய் வாழ
நாணத்தான் வேண்டியுள்ளது
பொய்யர்கள்
புரட்டர்கள்
வாய்ச்சொல் வீரர்கள்
திருடர்கள்
நாளும் கொழிக்கின்றனர்
நல்லவன் தேய்வதும்
மற்றவன் வளர்தலும்தான்
நானில நீதியா?
தீர்மானித்தேன் நானும்
உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசி
உலகை வளைக்க
தக்கார்
தகவிலர் அறிந்த
சமுதாய சங்கப்பலகை
வெளியே தள்ளியது
என்னை
8
இந்து என்றும்
இஸ்லாமியர் என்றும்
கிறிஸ்தவர் என்றும்
ஏனிங்கு பல ம்தங்கள்?
மனிதன் என்றே இணைவோம்
முழங்கினான்
கட்சிக் கூட்டத்தில்
அன்றுதான் இணைந்தவன்
பின்னால்
அமர்ந்திருந்த
தலைவர் கேட்டார்
அருகிலிருந்தவரிடம்
பேசுபவன் யார் மகன்
என்ன சாதை என
9
வெள்ளைத் தாளில்
நேர்க் கோடிட்டேன்
ஆஹா..அற்புதம்..
கவிதை அற்புதம்
என்றிட்டான் ஒருவ்ன்
மற்றவனோ
நேர்மையை வ்லியுறுத்தும்
பாங்கு அருமை
என்றிட்டான்
அடுத்தவனோ
வாழ்வில் நிமிர்ந்து நில்
வளமாய்ச் சொல்கிறது
என்றான்
நானோ
கவிதையின் கரு தேடி
விட்டத்தைப் பார்த்தேன்
10
செக்யூலரிசம்
சோசலிசம்
கம்யூனிசம்
அண்னாயிசத்தை விடக் குழ்ப்பம்
எழவு எதை எடுத்தாலும்
பார்ப்பனிசம்
மதவாதம்
இல்லாததும்
பொல்லாததுமாய்
நல்லிணக்கம் மறந்து
நரம்பின்றி பேசும் சமுதாயமே
சொல்பவன் மனிதன்
செய்பவன் மனிதன்
என்று வரும் நாளில்
எடுத்துவிடுங்கள்
இந்த இசங்களை
2021
