எஸ்ஸார்சி/ மாநரகம்

கவியரங்கக் கவிதை 5 – 17/10/25

எல்லோரும் மாநகரம்
நோக்கித்தான் கூட்டமாய் வருகிறார்கள் மாநகரம்
மக்கள் தொகைக் கூடிய மாநரகமாயிற்று சுவாசிக்கும்
காற்றும் குடிக்கும் தண்ணீரும் தூய்மை தொலைத்தன.
முதியவர்களும் சிறார்களும் அந்நியமாய்‌ உணர்கிறார்கள்
இடைப்பட்ட வர்கள் பணிச்சுமையிலும்
பயண நிர்ப்பந்தத்திலும்
சிக்கித்தவிக்கிறார்கள்
பெருகிய மக்கள் தொகையைப்
பெருவணிகர்கள் பெருலாபத்திற்கு
வழியெனக்கொண்டார்கள்
ஆரோக்கியமாய் வாழ்வதெல்லாம்
அவரவர் கொடுப்பினை
மருத்துவச் செலவு எட்டாக்கனி
சம்சாரிக்கு
என்று ஓயும் பிரச்சனை
படுத்தவனுக்கு எப்போது
வரும் மீளாப்பயணம்
என்பதிங்கு இருப்பவரின் வினா.
அவனைச் சொல்லிக்
குற்றமில்லை மனிதனாக
வாழமறுத்திட்ட சூழல்
ஜடமாக்கியிருக்கிறது அவனை
காசு காசு அதுவே வாழ்க்கை
செயற்கையாய் வாழலாம்
முடியலாம் அதுவே வாழ்க்கை.

எஸ்ஸார்சி/வேறுவழி – விருட்சம் நாளிதழ்

One Comment on “எஸ்ஸார்சி/ மாநரகம்”

Comments are closed.