இரஷ்ய நாட்டு நாடோடிக் கதைகள் |15
முன்னொரு காலத்தில் சானத்கான் என்னும் பெயருடைய ஓர் ஆற்றல் மிக்க அரசன் வாழ்ந்து வந்தான். ஒரு நாள் அவன் தனது மக்களுடன் சிறந்த முகாம் இடங்களையும், வளமான மேய்ச்சல் நிலைங்களையும் கொண்ட புதிய நிலப்பகுதிகளுக்குக் குடிபெயர முடிவு செய்தான்.
ஆனால், அந்த நிலப்பகுதிக்குச் செல்லும் பாதை மிகவும் நீண்டதாகவும், கடுமையானதாகவும் இருந்தது.
புறப்படுவதற்கு முன்னர் சானத்கான், முதியவர்கள் அனைவரையும் கொன்றுவிட உத்தரவிட்டான். ”வழியில் அவர்கள் நமக்குச் சுமையாக இருப்பார்கள்” என்று அவன் கூறினான். ஒரு முதியவர் அல்லது மூதாட்டி கூட நம்முடன் இருக்கக் கூடாது. எனது ஆணையை செயல்படுத்தாத அனைவரும் கடுமையாகத் தண்டிக்கப்படுவர்” என்று அவன் சொன்னான்.
அது ஒரு கொடூரமான ஆணை. மக்களுடைய இதயங்கள் கனத்தன. ஆனால், அவர்கள் அனைவரும் கானுக்குப் பயந்தனர்.
அவனுடைய ஆணையை மீற அவர்களுக்குச் துணிச்சல் இல்லை.
சானத்கானின் குடிமக்களில் சைரன் என்னும் பெயருடைய ஒரே ஓர் இளைஞன் மட்டும் அவனுடைய முதிய தந்தையைக் கொல்லுவதில்லை என்று உறுதி பூண்டான்.
ஒரு பெரிய தோல் மூட்டைக்குள் அவரை மறைத்துக வைத்துக் கொள்ளப் போவதாகவும், சானத்கானுகக்கும் மற்றவர்களுக்கும் தெரியாமல்இரகசியமாக அவரைத் தன்னுடன் கொண்டு செல்லப் போவதாகவும் சைரன் அவனுடைய தந்தையிடம் கூறினான். பின்னர் என்ன நடக்கும் என்பது பற்றி அவன் கவலைப்படவில்லை.
சானத்கான் அவனுடைய பழைய முகாமிடத்திலிருந்து வெளியேறினான். அவனுடைய மக்களுடனும், மந்தைகளுடனும் வடக்கே தொலைதூர நிலப் பகுதிகளுக்குப் புறப்பட்டான். சரனின் முதிய தந்தையும் குதிரையின் முதுகிலிருது தொங்கிய ஒரு பெரிய தோல் மூட்டைக்குள் இருந்தபடி அவர்களுடன் சென்றார்.
மற்றவர்களுக்குத் தெரியாமல் சைரன் அவனுடைய தந்தைக்கு உணவும், நீரும் கொடுத்தான். இளைப்பாறிச் செல்வதற்காக அவர்கள் ஓர் இடத்தில் முகாமிடும் போதெல்லாம் இருட்டும் வரை அவன் காத்திருப்பான். பின்னர், மூட்டையை அவிழ்த்து அவனுடைய தந்தையை வெளியே விட்டு அவரை ஓய்வெடுக்கச் செய்வான்.
இதுபோல அவர்கள் நீண்ட நாட்கள் பயணம் செய்து ஒரு பெரிய கடலின் கரையை அடைந்தனர். அங்கு தங்கி முகாமிடுமாறு சானத்கான் அவனுடைய குடிமக்களுக்கு உத்தரவிட்டான்.
இந்தச் சமயத்தில் கானின் வேலையாட்களில் ஒருவன் தண்ணீரின் விளிம்புவரை சென்றான். நீருக்கு அடியில் ஏதோவொன்று மினுங்கிக்கொண்டு கிடப்பதை அவன் பார்த்தான். அருகில் சென்று கவனித்தான். அது வழக்கத்திற்கு மாறான வடிவமுடைய ஒரு பெரிய தங்கக் கோப்பை என்பதை அவன் தெரிந்து கொண்டான். அவன் ஒரு விசுவாசமான
குடிமகனாக இருந்ததால் கானிடம் விரும்பிச் சென்று அதுபற்றிக் கூறினான்.
அந்தத் தங்கக் கோப்பையை உடனடியாகத் தன்னிடம் கொண்டு வருமாறு சானத்கான் உத்தரவிட்டான். ஆனால், கடலுக்குள் மூழ்க யாருக்கும் துணிச்சல் இல்லாததால், சீட்டு எழுதிப் போடடுப் பார்க்குமாறு கான் உத்தரவிட்டான்.
கானினுடைய வேலையாட்களில் ஒருவனுடைய பெயரே சீட்டில் வந்தது. அவன் கடலுக்குள் மூழ்கினான். ஆனால், அவன் மீண்டும் மேலே வரவே இல்லை.
அவர்கள் திரும்பவும் சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். இந்த முறை சீட்டில் பெயர் வந்த மனிதன் ஒரு செங்குத்துப் பாறையின் உச்சியிலிருந்து கடலுக்குள் குதித்தான். அவனும் மீண்டும் மேலே வரவே இல்லை.
இதே முறையில் சானத்கானின் குடிமக்களில் பலர் உயிரை இழந்தனர்.
ஆனால், இரக்கமற்றவனான சானத்கான் அவனுடைய முயற்சியைக் கைவிடுவது பற்றிக் கொஞ்சமும் சிந்திக்கவில்லை. ஒருவர் பின் ஒருவராக அவனுடைய பணிவான குடிமக்கள் அனைவரும் கடலுக்குள் குதித்து அழிந்தனர்.
கடைசியாக, சைரனின் முறை வந்தது. தங்கக் கோப்பையை எடுப்பதற்காகக் கடலுக்கள் மூழ்குவதற்கு முன்னர் அவன் தனது தந்தையை ஒளித்து வைத்திருந்த இடத்திற்குச் சென்று அவரிடம் விடை பெற்றான்.
“விடை பெறுகிறேன், தந்தையே. நாம் இருவருமே சாகப் போகிறோம்” என்று சைரன் கூறினான்.
“ஏன் அப்படிச் சொல்கிறாய்? என்ன நடந்தது?” என்று அந்த முதியவர் கேட்டார்.
தங்கக் கோப்பையை எடுப்பதற்காகக் கடலுக்கு அடியில் மூழ்க, சீட்டு தனது பெயருக்கு விழுந்திருப்பதாக சைரன் அவனுடைய தந்தையிடம் விளக்கினான்.
கடலுக்குள் மூழ்கிய ஒருவர் கூட மீண்டும் மேலே வரவில்லை’ என்று அவன் சொன்னான். “எனவே, நான் கானின் உத்தரவின்படி கடலுக்குள் மூழ்கி அழியப் போகிறேன். நீங்கள்
அவனுடையயாட்களால் இங்கு கண்டுபிடிக்கப் கொல்லப்படுவீர்கள்” என்று சைரன் கூறினான்.
அந்த முதியவர் தனது மகன் கூறியதை அமைதியாகக் கேட்டார்.
“இது தொடர அனுமதிக்கப்பட்டால், தங்கக் கோப்பையை எடுக்காமலேயே நீங்கள் எல்லோரும் மூழ்கி விடுவீர்கள். ஏனெனில் கடலுக்குத் தங்கக் கோப்பை எதுவும் இல்லை. அங்கே இருக்கும் மலையைப் பார். தங்கக் கோப்பை அதன் உச்சியில் இருக்கிறது. கடலுக்கு அடியில் இருப்பது போலத் தெரிவது அதனுடைய பிம்பம்தான்” என்று அந்த முதியவர் கூறினார். “நான் என்ன செய்வது?” என்று சைரன் கேட்டான்.
‘அந்த மலை உச்சிக்கு ஏறி, தங்கக் கோப்பையை எடுத்து அதைக் கானிடம் கொடு. அதைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்காது. அது மினுங்குவதால் தொலைவில் இருந்தே அதை எளிதாகப் பார்க்க முடியும். ஆனால் மலை, ஏறமுடியாமல் மிகவும் செங்குத்தாக இருந்தால், அங்கு சில மான்கள் வரும்வரை நீ காத்திருக்க வேண்டும். மான்கள் வந்ததும் அவற்றை நீ விரட்ட வேண்டும். ஓடும் அவசரத்தில் அவை அந்தக் கோப்பையைக் கீழே தள்ளிவிடும். பின்னர், சற்றும் தாமதிக்காமல் விரைவாக அந்தக் கோப்பையை எடுத்துக் கொள். ஏனெனில், நீ தாமதித்தால் அது ஆழமான பள்ளத்திற்குள் விழுந்துவிடும். பின்னர் அதை நீ ஒரு போதும் எடுக்க முடியாது” என்று முதியவர் யோசனை தெரிவித்தார்.
சைரன் தனது தந்தைக்கு நன்றி கூறி விட்டு உடனே மலையை நோக்கிப் புறப்பட்டான். மலை மீது ஏறுவது எளிதானதாக இல்லை. ரைசன் செடி, கொடிகளையும், கூரிய பாறைகளையும் பற்றிப் பிடிக்க வேண்டியதிருந்தது.
அவனுடைய முகத்திலும், கைகளிலும் சிராய்ப்புகள் ஏற்பட்டன. அவனுடைய ஆடைகள் கிழிந்தன.
கிட்டத்தட்ட மலை உச்சியை அடைந்தபோது அவன் தங்கக் கோப்பையைப் பார்த்தான். ஓர் உயரமாக பாறையில் அது இருந்தது. வெயியில் அது மினுங்கியது. அதை ஒருபோதும் தனனால் எடுக்க முடியாது என்பதை சைரன் தெரிந்து
கொண்டான் அவனுடைய தந்தை கூறிய யோசனை நினைவிற்கு வந்தது. எனவே, அங்கு நின்று மான்கள் வருவதற்காக அவன் காத்திருந்தான்.
நீண்ட நேரத்திற்கு அவன் காத்திருக்க வேண்டியதிருக்கவில்லை. விரைலிலேயே பல மான்கள் அந்தப் பாறைக்கு வந்தன. அமைதியாகக் கீழே பார்த்துக் கொண்டு அவை அங்கே தின்றிருந்தன. சைான் பலத்த குரலில் சத்தமிட்டான். மான்கள் பயந்து அங்கும் இங்கும் ஓடித் தொடங்கின. அங்கிருந்து ஓடும் அவசரத்தில் அவை தங்கக் கோப்பையைத் தள்ளிவிட்டன. (கோப்பை உருண்டு கீழே வந்தது. சைரன் தாமதிக்காமல் அதைப் பிடித்துக் கொண்டான்,
மிகவும் மகிழ்ச்சியுடன், கோப்பையைக் கையில் பிடித்துக் கொண்டு அவன் மலையிலிருந்து கீழே இறங்கினான். சானத்தான் இருக்குமிடத்திற்குச் சென்று அதை அவன் முன்னால் வைத்தான்,
“கடலுக்கு அடியிலிருந்து இந்தக் கோப்பையை நீ எப்படி எடுத்தாய்?” என்று கான் அவனிடம் கேட்டான்.
“இதை நாள் கடலுக்கு அடியிலிருந்து எடுக்கவில்லை. ஆனால் அங்குள்ள மலை உச்சியிலிருந்து இதை நான் எடுத்தேன். நாம் தண்ணீருக்கு அடியில் பார்த்தது இதனுடைய பிரதிபலிப்புதான்” என்று சைரன் பதிலளித்தான்.
“உன்னுடைய சொந்த யோசனையில் இதை நீ தெரிந்து கொண்டாயா?” என்று கான் கேட்டான்.
“ஆம்” என்று சைரன் கூறினான்.
அதற்கு மேல் எதுவும் கேட்காமல் கான் அவனைப் போக அனுமதித்தான்.
மறுநாள் சானத்கானும், அவனுடைய குடிமக்களும் அங்கிருந்து நகரத் தொடங்கினர்.
நீண்ட நேரம் பயணம் செய்த பின்னர் அவர்கள் ஒரு பெரிய பாலைவனத்தை அடைந்தனர். அங்கு வெயில் தகித்துக் கொண்டிருந்தது. எங்கும் ஆறு எதுவும் காணப்படவில்லை. நீரூற்றும் இல்லை. மனிதர்களும், கால்நடைகளும் தாகத்தால்
தவிக்கத் தொடங்கினர்.
தண்ணீரைக் கண்டுபிடிப்பதற்காக சானத்கானும் எல்லா திசைகளிலும் குதிரைகளில் தனது ஆட்களை அனுப்பி வைத்தான். ஆனால், அவர்கள் எவ்வளவு முயன்றும் அவர்களால் தண்ணீர் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. மக்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவர்கள் நம்பிக்கை இழந்தனர்.
சைரன் அவனுடைய தந்தையை ஒளித்து வைத்திருந்த இடத்திற்குச் சென்றான்.
“தந்தையே, நாம் என்ன செய்வது?” நாம் அனைவரும் தாகத்தால் சாகிறோம். கால்நடைகளும் அப்படித்தான்” என்று சைரன் தனது தந்தையிடம் கூறினான்.
“மூன்று வயதுடைய ஒரு பசுவை அதன் விருப்பப்படி உலவவிடு. அதைக் கூர்ந்து கவனி. அது எங்கெல்லாம் நின்று தரையை முகரத் தொடங்குகிறதோ அங்கு நீ தோண்ட
வேண்டும்” என்று அந்த முதியவர் சொன்னார்.
சைரன் அவனுடைய தந்தை சொன்னபடி செய்தான். ஒரு மூன்று வயது பசுவை அதன் விருப்பப்படி சுதந்திரமாக உலவவிட்டான். அது ஒவ்வொரு இடமாகச் சென்றது. அதைத் தொடர்ந்து கவனித்தான். அது ஓர் இடத்தில் நின்று தரையை முகரத் தொடங்கியதும் அவன் மற்றவர்களை அழைத்து ”அந்த இடத்தில் தோண்டினால் தண்ணீர் கிடைக்கும்” என்று கூறினான்.
அவர்கள் தோண்டத் தொடங்கினர். தோண்டியதும் குளிர்ச்சியான தெளிந்த நீர் நிலத்தடி நீரூற்றிலிருந்து பீறிட்டு வந்தது. தரையில் பாய்ந்து ஓடியது. அனைவரும் வயிறு நிறைய அந்த நீரைப் பருகினர். மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்தனர். சானத்கான் சைரனை அவன் இருக்கும் இடத்திற்கு அழைத்தான்.
“இந்த வறண்ட இடத்தில் உன்னால் எவ்வாறு தண்ணீரைக் கண்டுபிடிக்க முடிந்தது?” என்று கேட்டான்.
” தண்ணீர் எங்கே இருக்கிறது என்பதைச் சில அறிகுறிகள் எனக்குத் தெரிவித்தன” என்று சைரன் பதிலளித்தான்.
அவர்கள் அனைவரும் இன்னும் கொஞ்சம் அந்த நீரைப் பருகி ஓய்வு எடுத்தனர். பின்னர் அங்கிருந்து நகரத் தொடங்கினர். பல நாட்கள் பயணத்திற்குப் பின்னர் அவர்கள் மீண்டும் ஓர் இடத்தில் முகாமிட்டனர். எதிர்பாராத விதமாக இரவில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. குளிர் காய்வதற்காக மூட்டப்பட்டிருந்த நெருப்பு அணைந்தது. அவர்கள் எவ்வளவு முயன்றும் மீண்டும் நெருப்பு மூட்ட முடிவில்லை. அனைவரும் குளிர் தாங்காமல் நடுங்கினர்.
இந்தச் சமயத்தில், தொலைவில் இருந்த ஒரு மலையின் உச்சியில் நெருப்பின் ஒளிபோலத் தோன்றியதை ஒருவர் கவனித்தார்.
உடனே அந்த மலையிலிருந்து நெருப்பைக் கீழே கொண்டு வருமாறு சானத்கான் உத்தரவிட்டான்.
கானின் உத்தரவை நிறைவேற்ற மக்கள் விரைந்தனர். முதலில் ஒருவர், பின்னர் மற்றவர், பின்னர் மூன்றாமவர் என்று ஒருவர் பின் ஒருவராக மலைக்கு ஏறினர்.
காய்ந்த மரக்கிளைகளில் நெருப்பு எரிவதைக் கண்டு, ஒவ்வொருவரும் ஓர் எரியும் கட்டையை எடுத்துக் கொண்டு அதைக் கீழே கொண்டுவர முயன்றனர். ஆனால், ஒருவராலும் அதை முகாம் வரை கொண்டுவர இயலவில்லை. மழை அந்த நெருப்பை அணைத்துவிட்டது.
சானத்கான் மிகுந்த கோபமடைந்தான். நெருப்பு வராமல் திரும்பும் அனைவரையும் கொல்லுமாறு உத்தரவிட்டான்.
‘என்ன செய்வது தந்தையே? ஒரு எரியும் கட்டையை முகாமிற்கு எப்படிக் கொண்டு வருவது?” என்று சைரன்
கேட்டான்.
“கட்டைகளை எடுத்து வராதே. ஏனெனில், அதில் கனன்று கொண்டிருக்கும் நெருப்பை மழை அணைத்து விடும். அதற்குப் பதிலாக உன்னுடன் ஒரு பெரிய பானையை எடுத்துச் செல். எரியும் கரித்துண்டுகளால் அதை நிரப்பு. இந்த முறையில் மட்டும்தான் உன்னால் நெருப்பை முகாம்வரை கொண்டுவர இயலும” என்று முதியவர் கூறினார்.
சைரன் அவனுடைய தந்தை சொன்னது போலச் செய்தான். துண்டுகளைக் கொண்டு வந்தான். அதை வைத்து அவள் மலையிலிருந்து ஒரு பானை நிறைய எரியும் நெருப்புத் நெருப்பு மூட்டினான். மக்கள் அதில் குளிர் காய்ந்து, உணவும்
சமைத்தனர்.
சானத்கான் ‘நெருப்பைக் கொண்டு வந்தது யார்?’ என்பதை அறிந்தபோது தன்னை வந்து பார்க்குமாறு சைரனுக்கு அவன் உத்தரவிட்டான்.
“நெருப்பைக் கொண்டு வருவது எப்படி என்பதை அறிந்த நீ அதுபற்றி மவுனமாக இருந்தது ஏன்?” என்று கேட்டான்.
‘ஏனெனில் அதை எப்படிச் செய்வது என்பது எனக்கு தெரியாது” என்று சைரன் பதிலளித்தான்.
“இருந்தும் உன்னால் நெருப்பைக் கொண்டுவர முடிந்தது. அது எப்படி?” என்று கான் கேட்டான்.
கான் மிகவும் வற்புறுத்திக் கேட்டதால் கடைசியில் அவன் தனது தந்தையின் விவேகமான யோசனை மூலம்தான் கானினுடைய உத்தரவுகளைத் தன்னால் நிறைவேற்ற முடிந்தது என்பதை ஒப்புக் கொண்டான்.
“உனது தந்தை எங்கே இருக்கிறார்?” என்று கான் கேட்டான்.
“ஒரு தோல் மூட்டையில் ஒளித்து வைத்து அவரை நான் இங்குவரை கொண்டு வந்துள்ளேன்” என்று சைரன் கூறினான்.
அந்த முதியவரைத் தன் முன்னால் கொண்டு வருமாறு சானத்கான் உத்தரவிட்டான்.
“எனது உத்தரவை நான் ரத்து செய்கிறேன்” என்று அந்த முதியவரிடம் அவன் கூறினான்.
“முதியவர்கள் இளைஞர்களுக்கு ஒரு சுமை அல்ல. ஏனெனில் முதுமை விவேகமானதாக இருக்கிறது. நீங்கள் இனிமேல் ஒளிந்து கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. மற்றவர்களுடன் நீங்கள் சுதந்திரமாகப் பயணம் செய்யலாம்” என்று கான்
சொன்னான்.

One Comment on “கழனியூரன்/பெரியாரைத் துணை கொள்”
Comments are closed.