
இரஷ்ய நாட்டு நாடோடிக் கதைகள்
முன்னொரு காலத்தில் இரண்டு சகோதரர்கள் வசித்து வந்தனர். அவர்களில் ஒருவன் ஏழை. மற்றொருவன் பணக்காரன். பணக்காரச் சகோதரன் அவனுடைய அண்டை வீட்டுக்காரர்களுடன் மிகவும் நட்பாக இருந்தான். அவர்களை மகிழ்விக்கத் தயாராக இருந்தான்.
ஆனால், அவனுடைய சொந்த சகோதரனுடன் அவன் அன்பாக நடந்து கொள்ளவில்லை. அவனிடம் முன்பின் தெரியாதவன் போல நடந்து கொண்டான். அவனுடைய வசதிகளில் தனக்கும் பங்கு கொடுக்குமாறு அவன் கேட்டு விடுவானோ என்னும் பயம்தான் அதற்குக் காரணம்.
ஏழைச் சகோதரன் பணக்காரச் சகோதரனிடம் எதுவுமே கேட்கவில்லை என்று கூறமுடியாது. ஆனால், பணக்காரச் சகோதரனின் உதவி இல்லாமல் வாழ முடியும் என்னும் நிலை இருந்திருந்தால் அவன் ஒருபோதும் எதுவும் கேட்டிருக்கமாட்டான்.
ஒரு விடுமுறை நாளுக்கு முத்தின நான் மாலையில் அவனுடைய மனைவி அவனைப் பார்த்து “இந்த நாளை தாம் எப்படிக் கொண்டாடுவது? சாப்பிடுவதற்கு வீட்டில் எதுவுமே இல்லை! உங்களுடைய சகோதானிடம் சென்று சிறிது இறைச்சி வாங்கி வாருங்கள். அவன் நேற்று இறைச்சிக்காக ஒரு ஆட்டைக் கொன்றான். அதை நான் பார்த்தேன்” என்று கூறினாள்,
ஏழை அவனுடைய சகோதரனின் வீட்டுக்குப் போக விரும்பவில்லை. அவன் அதை அவனுடைய மனைவியிடம், சொன்னான். ஆனால், அவன் உதவி கேட்பதற்கு வேறு யாரும் இல்லை. எனவே, அவன் அவனுடைய மகோதரனின் வீட்டுக்குப்
போனான்.
“சகோதரனே, எனக்குச் சிறிது இறைச்சி கொடு, விடுமுறை நாளைக் கொண்டாட வீட்டில் எதுவுமே இல்லை” என்று தனது சகோதரனிடம் அவன் கூறினான்.
“இதோ இதை எடுத்துக் கொண்டு ஹியிசியிடம் போ’ என்று கூறியவாறே ஆட்டின் ஒரு குளம்பை அவனிடம் வீசினான், ஏழை சகோதரன் பணக்கார சகோதரனின் வீட்டில் இருந்து வெளியே வந்தான். ‘அவன் அந்தக் குளம்பை எனக்குத் தரவில்லை. வனதேவதையான ஹியிசிக்குத் தான் தந்திருக்கிறான். எனவே இதை நான் ஹியிசியிடம் கொண்டு செல்வதுதான் நல்லது” என்று அவன் தனக்குத்தானே கூறினான்.
எனவே, அவன் காட்டை நோக்கிச் செல்லத் தொடங்கினான். அவன் எவ்வளவு தூரம் சென்றானோ, யாருக்கும் தெரியாது. ஆனால், சற்று நேரத்தில் அவன் சில மர வெட்டிகளைச் சந்தித்தான்.
“நீ எங்கே போகிறாய்?” என்று அந்த மரவெட்டிகள் கேட்டனர்.
“வனதேவன் ஹியிசியைப் பார்த்து இந்த ஆட்டின் குளம்பை அவனிடம் கொடுப்பதற்கு” என்று ஏழை மனிதன் பதிலளித்தான்.
‘அவனுடைய குடிசை எங்கே இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று அவர்களிடம் அவன் கேட்டான்.
“நேரே முன்னால் போ. சாலையிலிருந்து ஒரு போதும் விலகாதே. நீ அவனது வீட்டை அடைவாய். ஆனால், முதலில் நாங்கள் கூறுவதைக் கேள். ஹியிசி ஆட்டின் குளம்புக்குப் பிரதி உபகாரமாக உனக்கு வெள்ளியைக் கொடுக்க முயன்றால் அதை வாங்கிக் கொள்ளாதே. அவன் உனக்கு தங்கத்தைக் கொடுக்க முயன்றால் அதையும் வாங்கிக் கொள்ளாதே. அவனுடைய திருகுகல்லை மட்டும் கேள். வேறு எதையும் கேட்காதே” என்று மரம்வெட்டிகள் அவனிடம் கூறினர்.
ஏழை மனிதன் மரம்வெட்டிகளின் அன்பான யோசனைக்காக அவர்களுக்கு நன்றி கூறி, அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு தொடர்ந்து நடந்தான்.
அவன் எவ்வளவு தூரம் சென்றானோ யாருக்கும் தெரியாது. ஆனால் சற்று நேரத்தில் அவன் ஒரு குடிசையைக் கண்டான். உள்ளே சென்றான். அங்கு ஹியிசி இருப்பதை அவன் பார்த்தான்.
ஹியிசி அவனைப் பார்த்து, “எனக்குப் பரிசுகள் கொண்டு வருவதாகப் பலர் வாக்கு அளிக்கின்றனர். ஆனால், அவர்கள் மிகவும் அபூர்வமாகத்தான் எனக்குப் பரிசு கொண்டு வருகின்றனர். நீ எனக்கு என்ன பரிசு கொண்டு வந்திருக்கிறாய்?’” என்று
கேட்டான்.
“ஒரு ஆட்டின் குளம்பு” என்று ஏழை மனிதன் பதில் அளித்தான்.
ஹியிசி மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.
“முப்பது ஆண்டுகளாக நான் இறைச்சி எதுவும் சாப்பிடவில்லை. விரைவில் அந்தக் குளம்பை என்னிடம் கொடு’ என்று அவன் சொன்னான்.
பின்னர் அந்தக் குளம்பை வாங்கி அதை அவன் தின்றான். “இனி குளம்பிற்குப் பிரதி உபயோகமாக நான் ஏதாவது கொடுக்க விரும்புகிறேன், இதோ இந்த இரண்டு குத்து வெள்ளியை எடுத்துக் கொள்’ என்று ஹியிசி கூறினான்.
“எனக்கு வெள்ளி எதுவும் வேண்டாம்” என்று ஏழை மனிதன் கூறினான்.
பின்னர் “எனக்கு வெள்ளி எதுவும் வேண்டாம்” என்று ஏழை மனிதன் கூறினான்.
பின்னர் ஹியிசி இரண்டு குத்து தங்கத்தை அள்ளி அதை அந்த ஏழை மனிதனிடம் கொடுத்தான்.
“எனக்குத் தங்கமும் வேண்டாம்” என்று ஏழை மனிதன் கூறினான்.
“அப்படியானால், உனக்கு வேறு என்ன வேண்டும்?” என்று ஹியிசி கேட்டான்.
“உங்களுடைய திருகுகல்தான் எனக்கு வேண்டும்” என்று ஏழை மனிதன் சொன்னான்.
“இல்லை, அதை நான் உனக்குத் தரமுடியாது. ஆனால், நீ எவ்வளவு பணம் கேட்கிறாயோ அதை நான் உனக்குத் தரமுடியும்” என்று ஹியிசி கூறினான்.
ஆனால், இதற்கும் ஏழை மனிதன் சம்மதிக்கவில்லை. அவன் ஹியிசியின் திருகுகல்லை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தான்
“நான் ஆட்டின் குளம்பைத் தின்று விட்டேன். எனவே, இனி நான் வேறு எதுவும் செய்ய இயலாது. அப்படியே ஆகட்டும். எனது, திருகுகல்லை நீ எடுத்துக் கொள். ஆனால், அதை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம் என்பது உனக்குத் தெரியுமா?” என்று ஹியிசி கேட்டான்.
“இல்லை. எனக்குத் தெரியாது. நீயே சொல்” என்று அந்த ஏழை மனிதன் சொன்னான்.
“நல்லது, இது சாதாரண திருகுகல் அல்ல. நீ அதனிடம் என்ன கேட்டாலும் அது உனக்கு அதைக் கொடுக்கும். ‘எனது திருகுகல்லே அரை’ என்று மட்டும்தான் நீ கூறவேண்டும். அதை நீ நிறுத்த விரும்பினால் ‘எனது திருகுகல்லே… போதும்’ என்று கூறினால் போதும், அது நின்றுவிடும். இனி நீ போகலாம்” என்று ஹியிசிவிடை கொடுத்தான்.
ஏழை மனிதன் ஹியிசியிக்கு நன்றி கூறி விட்டு வீட்டுக்குச் சென்றான்.
அவன் காட்டில் நீண்ட நேரம் நடந்தான். விரைவிலேயே இருட்டிவிட்டது. மழை வெள்ளம்போல கொட்டியது. காற்று ஊளையிட்டது. மரங்களின் கிளைகள் அவனுடைய முகத்தில்
அடித்தன காலையில் தான் ஏழை மனிதன் வீடு வந்து சேர்ந்தான்.
“இரவிலும், பகலிலும் எங்கே சுற்றிக் கொண்டிருந்தீர்கள்? எங்கே உங்களை நான் மீண்டும் பார்க்கவே முடியாதோ என்று எண்ணி நான் பயந்தே போனேன்” என்று கூறி அவனுடைய
மனைவி அவனை வரவேற்றாள்.
“நான் ஹியிசியின் வீட்டுக்குப் போயிருந்தேன். அவன் எனக்கு என்ன கொடுத்திருக்கிறான் என்பதைப் பார்” என்று ஏழை மனிதன் பதிலளித்தான்.
பின்னர் அவன் அவனுடைய பையிலிருந்து திருகுகல்லை வெளியே எடுத்தான்.
“எனது திருகுகல்லே, அரை! சாப்பிட சுவையான உணவுகள் எங்களுக்குக் கொடு” என்று அவன் கூறினான்.
திருகுகல் தானே சுற்றத் தொடங்கியது. தானியங்களும், சர்க்கரையும், இறைச்சியும், மீனும் ஒருவர் விரும்பக்கூடிய வேறு பலவும் கொட்டின.
ஏழை மனிதனின் மனைவி சட்டிகளையும் கிண்ணங்களையும் கொண்டு வந்து அவற்றில் நிறைய உணவை நிரப்பினாள். ஏழை மனிதன் பின்னர் திருகுகல்லைத் தனது விரலால் தட்டி “எனது திருகுகல்லே, போதும்” என்று சொன்னான். உடனே திருகுகல் அரைப்பதை நிறுத்தியது.
ஏழை மனிதன் குடும்பம் கிராமத்திலுள்ள மற்றவர்களைப் போலவே விடுமுறை நாளை நல்ல முறையில் கழித்தது. அந்த நாளிலிருந்து அவர்களுடைய வாழ்க்கையில் வசந்தம் வீசியது. தேவையான அனைத்தும் வீட்டில் போதுமான அளவில் இருந்தன. மனைவியிடமும் குழந்தைகளிடமும் சிறந்த புதிய ஆடைகளும், ஷுக்களும் இருந்தன. அவர்கள் திருப்தியாக வாழ்ந்தனர்.
ஒரு நாள் ஏழை மனிதன் அவனுடைய குதிரைக்கு சிறிது, ஓட்ஸ் தானியத்தைக் கொடுக்குமாறு திருகுகல்லுக்கு உத்தரவிட்டான்.
திருகுகல் அவ்வாறே செய்தது. குதிரை வீட்டுக்கு அருகில் நின்றுகொண்டு ஓட்ஸ் தானியத்தைத் தின்றது.
அப்போது பணக்கார மனிதன் அவனுடைய குதிரைகளுக்குத் தண்ணீர் காட்டுவதற்காக வேலைக்காரனை ஏரிக்கு அனுப்பினான்.
எஜமானன் சொன்னது போல வேலைக்காரன் செய்தான். ஆனால், அவர்கள் ஏழைச் சகோதரனின் வீட்டைக் கடந்து
சென்றபோது குதிரைகள் ஓட்சைப் பார்த்து நின்று அதைத் தின்னத் தொடங்கின.
பணக்கார சகோதரன் வெளியே வீட்டின் கூடாரத்திற்கு வந்தான்.
“குதிரைகளை உடனே தூர அழைத்துச் செல்லுங்கள். அவை குப்பைகளைப் பொறுக்குகின்றன” என்று அவன் தனது வேலைக்காரனுக்கு உத்தரவிட்டான்.
வேலைக்காரன் குதிரைகளைப் பற்றிச் சென்றான்.
“எஜமானரே, நீங்கள் சொல்வது தவறு. அவை குப்பைகள் அல்ல. மிகச்சிறந்த ஓட்ஸ். உங்களுடைய சகோதரரிடம் ஓட்சும், மற்றவையும் மிகவும் அதிக அளவில் இருக்கின்றன,” என்று வேலைக்காரன் கூறினான்.
பணக்கார சகோதரன் ஆர்வமடைந்தான்.
‘எனது சகோதரன் திடீரென்று பணக்காரன் ஆனது எப்படி?” என்று அவன் தனக்குத்தானே கூறிக் கொண்டான்.
பின்னர், அவன் அவனுடைய சகோதரனைப் பார்க்கச் சென்றான்.
“திடீரென்று நீ எப்படி பணக்காரன் ஆனாய்? இந்தப் பொருள்களெல்லாம் எங்கே இருந்து வருகின்றன?” என்று அவன் கேட்டான்.
ஏழைச் சகோதரன் அவனிடம் எதையும் மறைக்கவில்லை. “ஹியிசி எனக்கு உதவினான்” என்று அவன் கூறினான். “நீ என்ன சொல்கிறாய்?” என்று பணக்காரச் சகோதரன்
கேட்டான்.
“நான் என்ன சொல்கிறேனோ அதைத்தான், விடுமுறை நாளுக்கு முந்தின நாள் மாலையில் நீ எனக்கு ஆட்டின் ஒரு குளம்பைக் கொடுத்து அதனுடன் ஹியிசியிடம் போகுமாறு என்னிடம் கூறினாய். நானும் அப்படியே செய்தேன். அவன் அதற்குப் பதில் உபகாரமாக ஒரு மந்திரத் திருகுகல்லை எனக்குக் கொடுத்தான். இந்தத் திருகுகல்தான் நான் கேட்கும் அனைத்தையும் எனக்குக் கொடுக்கிறது” என்று ஏழைச் – சகோதரன் சொன்னான்.
“அதை என்னிடம் காட்டு” என்று பணக்காரச் சகோதரன் கேட்டான்.
‘இதோ காட்டுகிறேன்” என்று கூறியவாறு ஏழைச் சகோதரன் அவர்களுக்கு சாப்பிட அனைத்து வகையான சுவையான பண்டங்களையும் கொடுக்குமாறு திருகுகல்லுக்கு உத்தரவிட்டான். திருகுகல் உடனே சுற்றத் தொடங்கியது. புதிதாகச் சுடப்பட்ட தின்பண்டங்கள், வறுத்த இறைச்சிகள் மற்றும் சாப்பிடுவதற்கான வேறு நல்ல பண்டங்களின் எடை தாங்காமல் மேசை கிறீச்சிட்டது.
பணக்காரச் சகோதரனின் கண்கள் ஆச்சரியத்தால் வெளியே வந்து விட்டன.
“இந்தத் திருகுகல்லை என்னிடம் விற்றுவிடு” என்று அவன் கெஞ்சினான். “அது முடியாது. எனக்கே அது தேவைப்படுகிறது” என்று ஏழைச் சகோதரன் கூறினான். ஆனால், பணக்காரச் சகோதரனைப் புறக்கணிக்க முடியவில்லை.
“நீ விரும்பும் விலையை வாங்கிக் கொள். அதை எனக்கு விற்றுவிடு” என்று அவன் கூறினான்.
“இது விற்பனைக்கு அல்ல” என்றான் ஏழைச் சகோதரன். தனது ஏழைச் சகோதரனை நச்சரிப்பதால் தனக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை என்பதைத் தெரிந்துகொண்ட பணக்காரச் சகோதரன் வேறு அணுகுமுறையை முயன்று பார்த்தான்.
`உன்னைப் போன்ற நன்றி கெட்டவர்கள் வேறு எங்காவது உண்டா? ஆட்டின் குள உனக்குக் கொடுத்தது நான் இல்லையா?” என்றுஅவன் கத்தினான்.
“நீ தான் கொடுத்தாய்” என்றான் ஏழைச் சகோதரன். “அப்படியே வா! ஆனால், நீ உனது திருகுகல்லை எனக்குத் தர மறுக்கிறாய்! நீ உனது திருகு கல்லை விற்கவில்லை என்றால், அதைச் சில தினங்களுக்கு எனக்குக் கடனாகக் கொடு” என்று பணக்காரச் சகோதரன் வற்புறுத்தினான்.
ஏழைச் சகோதரன் அது பற்றி யோசித்தான்.
“மிகவும் நல்லது. சில தினங்களுக்கு நீ வைத்துக் கொளளலாம்” என்று அவன் சொன்னான்.
பணக்காரச் சகோதரன் மகிழ்ச்சி அடைந்தான். அவன் திருகுகல்லை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றான். வேண்டியதைப் பெற்றதும் அதை நிறுத்துவது எப்படி என்று கூட அவன் கேட்கவில்லை.
மறுநாள் காலையில் திருகுகல்லை எடுத்துக் கொண்டு அவன் அவனுடைய படகில் கடலுக்குள் சென்றான்.
இப்போது அவர்கள் கருவாட்டை உப்பிட்டு பதப்படுத்துகின்றனர். உப்பு விலை அதிகம். நான் உப்பு விற்கப் போகிறேன்” என்று அவன் தனக்குத் தானே கூறிக் கொண்டான்.
இதற்குள் அவன் கடலுக்குள் வெகுதூரம் சென்று விட்டான்.
‘“எனது திருகுகல்லே அரை! எனக்கு உப்பு தேவைப்படுகிறது. இதல் எவ்வளவு அதிகமாகக் கிடைக்குமோ அவ்வளவு சிறந்தது” என்று திருகுகல்லிடம் அவன் கூறினான்.
திருகுகல் சுற்றத் தொடங்கியது. அது சுற்றிக் கொண்டே இருந்தது. அதிலிருந்து மிகவும் சுத்தமான மிகவும் வெள்ளையான உப்பு கொட்டிக் கொண்டே இருந்தது.
பணக்கார மனிதன் மகிழ்ச்சியுடன் அதைப் பார்த்துக் கொண்டே இருந்தான். அவனுடைய இலாபத்தைக் கணக்கிட்டான். திருகுகல்லை நிற்கச் சொல்லுவதற்கான நேரம் வந்தது. ருகு கல்லே ஆனால், அவன் அவ்வப்போது “அரை எனது திருகு அரை! நிற்காதே” என்று மட்டும் கூறிக் கொண்டிருந்தான்.
அமிழ்ந்துகொண்டே இருந்தது. ஆனால், பணக்காரச் சகோதரன் உப்பு மிகவும் கனமாக இருந்ததால் படகு தண்ணீருக்குள் அவனுடைய அறிவை இழந்து விட்டது போலத் தோன்றியது. ஏனெனில், அவன் திரும்பத் திரும்ப
அரை. எனது திருகுகல்லே, அரை!” என்று கூறிக்கொண்டே இருந்தான், அதற்குள், படகுக்குள் தண்ணீர் வரத் தொடங்கியது. படகு மூழ்கும் நிலையை நெருங்கி விட்டது. அது பணக்காரச் சகோதரனின் அறிவை விழித்துக் கொள்ளச் செய்தது.
“அரைப்பதை நிறுத்து திருகுகல்லே! நிறுத்து திருகுகல்லே” என்று அவன் கத்தினான். ஆனால், திருகுகல் முன்பு போலவே அரைத்துக் கொண்டே இருந்தது.
“அரைப்பதை நிறுத்து திருகுகல்லே! நிறுத்து திருகுகல்லே” என்று மீண்டும் சத்தமிட்டான். ஆனால் திருகுகல் அரைத்துக் கொண்டே இருந்தது. அது நிற்கவில்லை.
பணக்காரச் சகோதரன் திருகுகல்லை எடுத்துக் கடலுக்குள் போட முயன்றான். ஆனால், அது படகின் தரையில் நன்றாக ஒட்டிக் கொண்டது போலத் தோன்றியது. அவனால் அதைத் தூக்க முடியவில்லை.
“உதவி, உதவி! யாராவது என்னைக் காப்பாற்றுங்கள்” என்று பணக்கார சகோதரன் ஓலமிட்டான். ஆனால் அவனைக் காப்பாற்றவோ அல்லது அவனுக்கு உதவவோ அங்கு யாரும் இல்லை.
பணக்காரச் சகோதரனின் படகு கடலில் மிகவும் ஆழத்திற்குள் மூழ்கியது.
திருகுகல் என்ன ஆனது? கடலுக்கு அடியில் கூட திருகுகல் அரைப்பதை ஒருபோதும் நிறுத்தவில்லை என்றும் அது மேலும் உப்பை உற்பத்தி செய்து கொண்டே இருந்தது என்றும் அவர்கள் கூறுகின்றனர். நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் அதனால்தான் கடல் நீர் உப்பாக இருக்கிறது.
