டி வி ராதாகிருஷ்ணன்/வள்ளுவத்தில் வாழ்வியல் – 12

ஒருவரிடம் நட்பு கொண்டு விட்டோம்..ஆனால் நாளாக ஆக அந்த நண்பரின் சுயரூபம் தெரிகிறது.ஆனால் அந்த நட்பை முறித்துக் கொள்ள இயலாதவாறு ஒரு நிலையை உருவாக்கி விட்டான் அந்த நண்பன்.இப்போது அவனை விட்டு விலகினால் உங்களுக்கு ஆபத்து..

இதையெல்லாம் எப்படி தவிர்ப்பது..?

ஒருவரிடம் நட்பு பாராட்டுமுன் அவரைப் பற்றி நாம் அறிந்திருக்க வேண்டும்..அதைச் செய்யாமல் நண்பனாகி விட்டால் அது தீய நட்பாக அமையும் வாய்ப்பும் இருக்கிறது.

இதைத்தான் வள்ளுவர் சொல்விளையாட்டுடன் நட்பாராய்தல் அதிகாரத்தில் முதல் குறளாகச் சொல்லியுள்ளார்.

நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்

வீடில்லை நட்பாள் பவர்க்கு (791)

.ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அந்த நட்பிலிருந்து விடுபட முடியாத அளவிற்குக் கேடுகளை உண்டாக்கும் என்பதே இதன் பொருள்.