இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை - 7
பூச்சி பறந்து கொண்டிருக்கிறது
பூச்சியைப் பல்லி சாப்பிட்டது
பூச்சி அப்படியும் பறந்தது
கண்ணில் விழுந்தது
சாதம் சாப்பிடும் தட்டில் கிடந்து நெளிந்தது
தண்ணீரில் மிதந்தது
உள்ளுருப்புகளைக் காட்டியபடி
அசிங்கமாகப் படுத்துக் கிடந்தது
ட்யூப்லைட் முழுவதும் பூச்சிகள்
டிவி திரையிலும்
பூச்சி விதம் விதமாய்த் தெரிந்தது
ஒரு பூச்சிக்கும் இன்னொரு பூச்சிக்கும்
அடையாளம் இல்லை
ஊன்னு ஊதினால் பூச்சி உயிரை விடுகிறது
பையன் கையால் பூச்சியைக் கொன்றான்
பூச்சியின் உயிர் துச்சம்
மூச்சுக்காற்று உள்ளே இழுக்கையில்
மூச்சினுள்ளே சென்று வாயின் வழிவந்தது
பூச்சி நமக்குத்தெரியாமல் நம்முடன் வாழ்கிறது
நாம் இருக்கிறோம்
அழகியசிங்கர்/சாப்பிட்ட பிறகுதான் – விருட்சம் நாளிதழ்