நாகேந்திர பாரதி/வெற்றியின் வேர்கள்

அழகியசிங்கரின் சொல்புதிது 17 /10 /25 அன்று நடந்த கவிதை நிகழ்வில் வாசித்த எனது கவிதைகள் – 1

சுற்றமும் நட்பும்
சூழலும் சேர்ந்து

வெற்றிச் செடியை
வேகமாய் வளர்த்து

விரிந்து பரந்த
விருட்சமாய் ஆக்கினும்

விதையில் இருக்கிறது
வெற்றியின் ரகசியம்

முட்டி முளைத்து
எட்டி வளர்ந்த

வேர்வையில் இருக்கிறது
வெற்றியின் வேர்கள்

2 Comments on “நாகேந்திர பாரதி/வெற்றியின் வேர்கள்”

Comments are closed.