இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை
கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர்

கசாப்புக் கடையில்
கட்டித் தொங்க விட்டிருந்த
ஆட்டின் கண்கள் கேட்டன
கசாப்பு கஜாவை
எண்ணில் அடங்கா உயிர்களை
நொடிக்குள்
சிதறடிக்கும் உன்னால்
ஒரே ஒரு முறை
ஓய்ந்து நின்ற என் இதயத்தை
இயக்கிட முடியுமா? சொல்..
அதனைச் செய்து..
புலால் உண்ணூபனிடம்
அருளில்லை என்ற
பொய்யாமொழிப் புலவனின் வாக்கு
பொய்யென நிரூபி

One Comment on “டி.வி.ராதாகிருஷ்ணன் கவிதை வரிசை எண் 5”
Comments are closed.