
இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை
கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர்
யானை படுத்தால்
குதிரை உயரம் என்பதால்
குதிரை சிறப்பற்றதா
பட்டுப் புழு பின்னாளில்
பட்டுப்பூச்சியாய் பறக்கும் என்பதல்
மலப்புழு தன்னை
பட்டுப்புழுவாய் எண்ணூவதா?
எழுத்தாளன் என்பதால்
எழுதுவதெல்லாம் தரமனதா?
தரமானதை எழுதாததால் அவன்
தரமற்ற எழுத்தாளனா
சாதி எனும் முள்கிரீடத்தை
தூக்கி எறிந்ததால்
அவன் மனிதனில்லையா
அவன் மனிதன் என்பதால்
சதியை பற்றுவதா?
மனிதனாய் வாழ்பவனுக்கு
மனித நேயம் இல்லையா?
மனித நேயம் இல்லாததால்
மனிதனாவானா அவன்
மனித சாதிக்கும்
மிருக சதிக்கும்
வேறுபாட்டை உணர்ந்தால்
மனிதன் ஆகிவிடலாமா?

One Comment on “டி.வி.ராதாகிருஷ்ணன் கவிதை வரிசை எண் 6”
Comments are closed.