ஆர்க்கே!/ஏழாவது இழப்பு!




இத்துடன் சேர்த்து
நான்
தொலைத்த
ஏழாவது செல்ஃபோன் இது.

ஒரு செல்ஃபோன்
தொலைப்பது என்பது
இன்றைய
இந்த பரபரப்பு உலகில்
ஜனசந்தடியில்
புதியதானதொரு
உலக அதிசயம் ஒன்றுமில்லைதான்.

ஆனால்
தொலைத்த விதமும்
தொலைத்த இடமும்தான்
என்னை ஆச்சரியப்படுத்துகிறது.

விரல்விட்டு எண்ணக்கூடிய
அளவிலேயேயான
இலக்கிய கூட்டம் அது.
அதிலும்
வந்திருந்தவர்களில்
பாதிப்பேர்
தங்கள் உரை பேச வந்தவர்கள்.

கூட்டப் பங்களிப்பில்
நானும் இருந்ததால்
நான் செல்ஃபோனை
அமைதிப் படுத்தியிருந்தேன்.

அருகிலிருந்த
இலக்கிய அன்பர்
என் செல்ஃபோனை
ஏதோ உதவிக்காய்
எடுத்துச் சென்றார்.

அதி முக்கிய
இலக்கிய கூட்டம்
நடந்து கொண்டிருந்தது.
கொஞ்ச நேரம் ஆனபின்

அந்த
இலக்கிய அன்பர்
இங்குமங்கும் அலைபாய்ந்தபடி
எதையோ தேடும்
பரபரப்பிலிருந்தார்.

அவரிடம்
காரணம்
கேட்டுத் தெரிந்தபின்
அந்த பதற்றம்
அவரைவிட என்னிடம்
அதிகம் வந்துவிட்டது.

இப்போதுதான்
வாங்கிய
என் ஏழாவது ஃபோனும்
காணாமல் போயிருந்தது.

காணாமல் போகிற ஃபோன்களின்
இழப்பு பாதிப்பு
உறவுகளின் இழப்பின்
வலியை விட
இன்னும் ஆழமானது

சிம் மாற்றுவது
சேமித்த தகவல்கள்,
தொடர்புகள்,
படங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள்
இன்ன பிற இத்யாதிகளை
இன்னொரு ஃபோனுக்குள்
புனரமைப்பதற்குள்
போதும்டா சாமி என்றாகிவிடும்.

வெளியார் யாரும்
வரும் வாய்ப்பில்லை.
உள்ளோர் யாரிடமும்
என் செல் இடம் மாறியிருக்கும்
சாத்தியமுமில்லை.

மறுபடியும் புது ஃபோனைத்
தொலைச்சாச்சா
என்பது போல்
என் மனைவி
ஒரு பார்வை பார்த்தாள்.

அவளிடமிருந்த அவள்
ஃபோனைப் பிடுங்கி
அதிலிருந்த
என் எண்ணுக்கு அழைத்தேன்.

எங்கோ என் ஃபோனில்
மணி அடித்தபடி இருந்தது.

One Comment on “ஆர்க்கே!/ஏழாவது இழப்பு!”

Comments are closed.