இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை - 4
நானும் நீயும்தான்
இந்த அறை முழுவதும்
நமக்குத் திருமணம் நடந்ததோ
நேற்றுப் பகல் பொழுதில்
உன்னைப்பற்றி அறிந்துகொள்ள
துடிப்பாக நானிருக்கிறேன்
ஆனால் பேசத் தயங்குவது
ஏனென்று தெரியவில்லை
வரதட்சிணை வாங்கிக்கொண்ட
என்குடும்பம் பற்றி என்ன நினைக்கிறாய்
பெண்ணிற்குத் தலைமயிர் குறைச்சலென்று
வேண்டாத யாரோ சொன்னதை
யோசனையில் வைத்திருக்கிறாயா
சாப்பாடு சரியில்லை என
நமக்குத் தெரியாத மூன்றாம் மனிதர்
சத்தம்போட்டுச் சொல்லிவிட்டுச் சென்றதை
இன்னும் நினைத்துக் கவலைப்படுகிறாயா
மௌனம் எதற்கென்று
இப்போது சொல்லவேண்டாம்
என்னைப் பார்த்துப் புன்னகைத்தால்போதும்
அழகியசிங்கர்/மழை 2 – விருட்சம் நாளிதழ்
One Comment on “அழகியசிங்கர்/புன்னகை செய், பெண்ணே”
Comments are closed.