அழகியசிங்கர்/ மழை 3

மழை தூறி முடிந்தது
சம்பவங்கள் நடக்காமலில்லை
ஸ்தம்பித்துப் போன தோற்றம்
விடைபெறும் நண்பர்
எல்லோருடனும் புன்னகை செய்தார்
எப்போதும் குறைந்த வார்த்தைகளைப்
பயன்படுத்துவார்
தெருவைக் கடக்கும்போது
ஈரம் சதக்கென்று காலில் ஒட்டி
வெறுப்பாய் மாறுகிறது பாவனை
விடைபெறும் நண்பர்
புதிய இடம் செல்ல ஆயத்தமாகிறார்
தனியாகப் பயணம்
பெற்றோரை விட்டுச்செல்லும் தயக்கம்
புதிய இடம்
புதிய முகங்கள்
வேறு மொழி
இங்கு ஈரம் இருந்துகொண்டுதான்
இருக்கிறது
நண்பர் மனதிலும்
சதக்கென்று காலில் ஒட்டாத ஈரம்
நினைவுப் பறவைகள் மிதந்த வண்ணம்
புதிய இடம்
வரவேற்கக் காத்திருக்கலாம் 

அழகியசிங்கர்/புன்னகை செய், பெண்ணே – விருட்சம் நாளிதழ்