அழகியசிங்கர்/அவர்கள் யார்?

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை 5

    அவர்கள் என்னைப் பார்த்து
    பேச ஆரம்பித்தார்கள்

    நானும் அவர்களுடன் பேசிப்பார்த்தேன்

    அவர்கள் என்னைப் பார்த்து
    நகைக்க ஆரம்பித்தார்கள்

    நானும் அவர்களுடன் நகைத்தேன்

    அவர்கள் என்னைப் பார்த்துத்
    திட்ட ஆரம்பித்தார்கள்

    நானும் அவர்களுடன் திட்டிக்கொண்டேன்

    அவர்கள் என்னைப் பார்த்து
    போகிறான் பைத்தியக்காரன் என்றார்கள்

    நானும் தெரிந்தேன் பைத்தியமாய்

    அவர்கள் அடிக்கக் கையை ஓங்கினார்கள்
    நானும் சுலபமாய் அடிப்பட்டுக்கொண்டேன்

    இருந்தாலும் அவர்களை என்னால்
    விட முடியவில்லை

One Comment on “அழகியசிங்கர்/அவர்கள் யார்?”

Comments are closed.