அழகியசிங்கர் /தண்ணீர் பற்றிய என்பா கவிதைகள்

1.

இன்று தண்ணீர்
நாளாம். அலைகிறோம்
தண்ணீருக்காக எங்கும்
கையில் இருக்கும்
காசை தண்ணீருக்காக
செலவு செய்கிறோம்
தண்ணீர் கிடைக்காவிடில்
கண்ணீர்தான்

2.

தாகம் எடுத்தது
குடிக்க தண்ணீர்பாட்டில்
ஒன்று வாங்கினேன்
கடகடவென்று குடித்தேன்
எல்லோருக்கும் எங்கும்
கதண்ணீர் கிடைக்க
வேண்டும் எம் பெருமானே

3.

சென்னை வெயிலால்
தீப்பற்றி எரிகிறது
தாகத்தால் தொண்டைக்
காய்ந்து போகிறது
கண்ணில் படவில்லை
தண்ணீர் பாட்டில்
ஐயோ, என் செய்வேன்