
1920-ம் ஆண்டு கோவைக்கு வெற்றுக் கையுடன் திரும்பிய அப்பா, அப்போது மோட்டார் வண்டி விற்பனையில் ஈடுபட்டிருந்த ஸர் ராபர்ட் ஸ்டேன்ஸிடம் சென்று ஃபிட்டராகச் சேர விருப்பம் தெரிவிக்க, அப்பாவின் நேர்மை, தொழில்பால் கொண்ட சிரத்தையை நன்கு உணர்ந்திருந்த ஸ்டேன்ஸ், “உன் திறமைக்கு நீ என்னிடம் வேலை பார்ப்பது சரி அல்ல; சுயமாக மோட்டார் பஸ் ஒன்றை வாங்கி பயணிகள் போக்குவரத்துக்கு ஓட்ட முயற்சித்துப் வாழ்க்கையில் பாரேன்?” என்று கூற, இது அப்பாவின் அடுத்த மிகப் பெரிய திருப்பமாக அமைந்தது.
நண்பர்களிடம் கடன் வாங்கி அப்பா கொடுத்த பணத்தைத் தவிர, மீதியைக் கடனாக ஸ்டேன்ஸ் துரையே தர, அப்பா ஒரு பஸ்ஸுக்குச் சொந்தக்காரரானார். ஒரு சில நாட்களிலேயே திறம்பட ஓட்டக் கற்றுக்கொண்டு விட்ட அப்பாதான், பொள்ளாச்சியிலிருந்து பழனிவரை ஓடிய அந்த பஸ்ஸின் ஓட்டுனர், நடத்துனர், சுத்தம் செய்பவர், மெக்கானிக், கணக்கர், முதலாளி – எல்லாம்!
‘மிடாஸ்’ என்னும் மன்னன் தொட்டதெல்லாம் பொன் னாகும் என்பார்கள். அதைப்போலவே அப்பாவுக்கும் ஒரு ஸ்பரிசம் இருந்திருக்க வேண்டும் என்பார்கள் அவரது நண்பர்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை அயராத உழைப்பு, நேர்மை, கண்டிப்பு எல்லாம் ஒருசேர இருந்ததில், ஒன்று 1922-ல் இரண்டாகி, 1924-ல் இருபத்தி மூன்றாகி, 1933-ல் யு.எம்.எஸ். என்கிற ஆலமரமாக விஸ்வரூபம் எடுத்த போது இருநூற்று எண்பதையும் எண்ணிக்கையில் தாண்டி, இந்தியாவுக்கே பஸ் நிர்வாகக்தில் ஒரு முன்னோடியாக அமைந்தது என்றே நினைக்கிறேன்.
1923-ம் ஆண்டு முதல்முதலில் அப்பா வெளிநாடு களுக்குச் சென்றார். ஜெர்மனி, லண்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் பல மாதங்களுக்கு மொழி தெரியாத அவஸ்தையைப் பெரிதுபண்ணாமல் பயணித்து, நிறைய தொழிற்சாலைகளுக்கு விஜயம் செய்து, பல அரிய விஷயங்களைக் கற்றுவந்து, முடிந்தவரையில் தாய்நாட்டில் தான் அறிந்தவற்றை நடைமுறையில் உபயோகப்படுத்திப் பயன் காண முயன்றார்.
உலகத்தின் முதல் எலெக்ட்ரிக் ரேஸர் எனப்படும் ரேஸன்ட் ரேஸர் மின்சார சவரக் கருவியைக் கண்டு பிடித்தது, இந்தப் பயணத்தின்போதுதான். தொடர்ந்து சுயமாகச் சிந்தித்து அப்பா கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள் ஏராளம். புகைப்படக்காரர்களுக்கு உதவக்கூடிய டிஸ்டன்ஸ் அட்ஜஸ்டர் (Distance Adjuster), வாக்குப்பதிவு யந்திரம் (Vote Recording Machine), வைப்ரோ டெஸ்டிங் மெஷின் (Vibro Testing Machine), கால்குலேட்டிங் மெஷின் (Calculating Machine), நூதன லென்ஸ் (Lense), மாறுதலான ஐஸ்பெட்டி (Refrigerator), ரிகார்டிங் மெஷின் (Recording Ma- chine), ரேடியோ கிளாக் (Radio Clock), காபி மிஷின் (Cof- fee Machine), காசு போட்டால் தானே பாடும் யந்திரம் (Slot Singing Machine), பழரசம் எடுக்கும் யந்திரம் (Orange Juice Extracter) – இப்படி சுமார் நூற்றுக்கு மேற்பட்ட அரிய கண்டுபிடிப்புகளை, அப்பா அந்தப் பத்து வருட இடை வெளியில் கண்டுபிடித்திருக்கிறார்!
இதன் நடுவில் அப்பா மேற்கொண்ட அயல்நாட்டுப் பயணங்களும் துவங்கிய தொழிற்சாலைகளும் அனேகம். குறிப்பாக 1939-ல் அவர் ஆரம்பித்த எலெக்ட்ரிக் மோட்டார் கம்பெனி, இந்தியாவிலேயே அத்தகைய முதலாவது தொழிற்சாலையாக அமைந்ததைக் கூறலாம்.
மூன்றாவது முறையாக அதே ஆண்டில் அப்பா மேல் நாடுகளுக்குச் சென்றபோது தன் 47-வது வயதில் கார்ட்டர் கார்புரேட்டர் பள்ளியில் மாணவராகச் சேர்ந்து, கற்பதற்கு வயது ஒரு தடையே அல்ல என்பதை நிரூபித்தார்.
1945-ல் ஸர் ஆர்தர் ஹோப் பாலிடெக்னிக்கை ஆரம்பித்ததன் மூலம், இந்தியாவின் முதல் பாலிடெக்னிக் பள்ளியைத் துவக்கினார் என்கிற பெருமை அப்பாவுக்குக் கிடைத்தது. ஆர்தர் ஹோப் என்ஜினியரிங் அந்த வருடமே அப்பாவின் செலவில்
கல்லூரியும் பின்னர் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
ரேடியோ, ரேடியேட்டர்கள், கார்பானிக் பொருட்கள் தயாரிப்பு என்று பலவகைப்பட்ட தொழிற்சாலைகளை அப்பா நிறுவினார். 1960-ஆம் ஆண்டுவரை அவர் துவங்கத் திட்டம் தீட்டியிருந்த தொழில்களின் எண் ணிக்கை 70. இந்தியாவுக்கு அத்தியாவசியம் எனக் கருதி மேலைநாடுகளில் அந்தந்த நுணுக்கப் பயிற்சிக்காக அவர் பேச்சுவார்த்தைகள் நடத்திக்கொண்டிருந்த தொழிற் சாலைகளின் எண்ணிக்கை சுமார் 160-க்கும் மேலேயே!
இந்தத் தொழில்களில் பல, துவக்கப் பேச்சுவார்த்தையிலேயே முடங்கிப்போயின; சில, கடைசிக் கட்டத்தில் முடக்கப்பட்டன என்பது நெஞ்சை கனக்க வைக்கும் உண்மை. அப்படி ஒரு நிலை வரக் காரணம் என்ன என்பதைச் சம்பந்தப்பட்ட அத்தியாயங்களில் எனக்குத் தெரிந்தவரை பிற்பாடு விளக்குகிறேன்.
அப்பாவின் ஆராய்ச்சி குணம் இயந்திரங்களோடு மட்டும் நிற்கவில்லை, விவசாயத் துறையிலும், சித்த, ஆயுர்வேதத் துறைகளிலும் அவர் சாதித்துள்ளவை யாரையும் அதிசயிக்க வைப்பவை.
ஊசி வழியாகக் குறிப்பிட்ட மருந்து ஹார்மோன் களைச் செலுத்துவதன் மூலம் அப்பா கண்டுபிடித்த விதையில்லாத மிகவும் ருசிகொண்ட பப்பாளி, ஆரஞ்ச் ஊர் பிரசித்தம், அவருடைய சோளச் செடி 19அடி வரை வளர்ந்து, 3i சோளக் கதிர்களைத் தந்து உலக ரிகார்டை உடைத்திருக்கிறது; துவரைச் செடி மரமாகி கிலோ கணக்கில் பயிரைத் தந்திருக்கிறது. பருத்திச் செடி விஞ்ஞான அதிசயங்களில் ஒன்று என்று விவசாய விஞ்ஞானிகளால் போற்றப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் பழமையான வைத்திய முறைகளான சித்த, ஆயுர்வேத, யுனானி சிகிச்சைகளில் அப்பாவுக்கு நம்பிக்கை மிக அதிகம். போத்தனூரில் விவசாயப் பண்ணை துவக்கி அதில் பரிசோதனைகளைச் செய்த மாதிரியே, கோபால் பாகிலேயே டாக்டர் பி.பி. நாயுடு
னும் வைத்தியருடன் சேர்ந்து ஆதிநாளைய சுவடிகளில் கூறப்பட்டிருக்கும் விதங்களில் ஆராய்ச்சி செய்து, சர்க்கரை வியாதி, வெள்ளைப்படுதல், மூலம் போன்றவற்றுக்கு அரிய நாட்டு மருந்துகளைக் கண்டுபிடித்திருக்கிறார். இவற்றை நம்நாட்டில் மட்டுமல்ல, மேலை நாட்டிலேயும் விநியோகித்துப் பல பாராட்டுகளைப் பெற்றதைப் பிறிதொரு அத்தியாயத்தில் விளக்கமாகக் கூறுகிறேன்.
நான் உணர்ந்த வரையில் அப்பா இந்திய நாட்டின் மேல் ஏக பக்தி கொண்டிருந்தார். தான் ஓர் இந்தியர் என்பதில் கர்வம் அதிகம் என்றே நினைக்கிறேன். இதன் காரணமாகத்தான் ஆங்கில அரசு அவருக்கு மிக கௌரவமானதாகக் கருதப்படும் ‘ஸர்’பட்டத்தை அளிக்க முன்வந்தபோது அதை ஏற்க மறுத்துவிட்டார் என்பதும் என் கணிப்பு.
ஆனாலும், பிற்காலத்தில் வரிகொடா போராட்டத்தை இந்திய அரசாங்கத்துடன் நடத்தியதும், ஆதியில் தீவிர காங்கிரஸ்காரராக இருந்து 1915-லிருந்து ஒரு காங்கிரஸ் மாநாடு விடாமல் நாடு முழுவதும் பயணித்து பஸ்
கொடுத்தவர், மகாத்மா காந்தியிடம் அலாதி பக்தி கொண்டு, அவரைத் தன் போத்தனூர் வீட்டில் 1934-ம் ஆண்டில் தங்க வைத்தவர் – பிற்பாடு காங்கிரஸுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ததும், தானே தேர்தல்களில் நின்றதும் பலருக்கு முரண்பாடுகளாகவே தோன்றலாம். என்ன செய்வது? அப்பாவும் ஒரு மனிதர்-குறை நிறைகளைக் கொண்ட மனிதர்தானே? அதனால் நிறைகள் ஒருசில இருப்பது இயற்கைதானே? சின்ன வயதில் உண்டான ஒரு ரசனை, வயசு ஏறஏற மாறுபடுவது பலரிடம் காணப்படும் ஒரு இயல்பான குணம். அந்த ரீதியில் அப்பாவும் தன் ஆரம்ப கால விருப்புவெறுப்புகளிலிருந்து பின்னர் வித்தியாசப் பட்டிருக்கலாம்; யாரும் மறுக்கவில்லை. என்றாலும், பிறர் முரண்பாடுகள் என்று எண்ணும் அவருடைய சில காரியங்களைக்கூட என்னால் இயன்றவரையில் அடுத்து வரும் அத்தியாயங்களில், ஏன் அப்படிச் செய்தார் என்று அலசிப் பார்க்க முனைந்தால் என்ன?
மொத்தத்தில் வித்தியாசமான மனிதராக, பல விதங்களில் மற்றவர்களை வியக்க வைத்தவராக, மகா பிடிவாதக்காரராக, உழைக்க அஞ்சாதவராக, சமுதாயத்தின், முக்கியமாய் இளைய தலைமுறையினரின் வளர்ச்சியில் மாபெரும் அக்கறை கொண்டவராக, ‘படிக்காத விஞ் ஞானி’, ‘படிக்காத தொழில் மேதை’, ‘அதிசய மனிதர்,’ ‘எக்சென்ட்ரிக் இன்டஸ்ட்ரியலிஸ்ட்’ என்கிற பட்டப் பெயர்களைக் கொண்டவராக வாழ்ந்த அப்பா, தனது 80-ஆவது வயதில் 4-1-1974 அன்று மரணம் அடைந்த பிறகு, ஒரு மாறுபட்ட சகாப்தம் முடிவடைந்தது என்றே யாவரும் ஒட்டுமொத்தமாகக் கருதினார்கள்.
இனி, அந்த மனிதர் மற்றவர்களிலிருந்து எவ்வாறு, ஏன், எதற்காக, தனித்து நின்றார் என்பதைப் புரிந்து புத்தி உடையவன் என்கிற அடைமொழிக்கு அவர் ஓர் உதாரணமாகப் பலவிதங்களில் அந்தச் சின்ன வயதிலிருந்தே திகழ்ந்தார் என்றே கூறலாம்.

One Comment on “சிவசங்கரி /அப்பா”
Comments are closed.