ப.மதியழகன்/தோண்டத் தோண்ட வரும் சடலங்கள்

அழகியசிங்கரின் என்பா

தோண்டத் தோண்ட வரும் சடலங்கள்
இயற்கையால் கைவிடப்பட்ட கடவுளின் தேசம்
ஓர் இரவு விடியாமல் போனது
அச்சுறுத்தும் பேய் மழை.

தோண்டத் தோண்ட வரும் சடலங்கள்
கருணையற்ற கடவுளின் விளையாட்டு இது
ஊழியின் கோரத்தாண்டவம் இந்த துயரம்
இங்கே மலைகளுக்கு கால்முளைத்துவிட்டது.

தோண்டத் தோண்ட வரும் சடலங்கள்
மானுட இனம் கனவுகளைத் தொலைத்தது
கடவுள் கல்லாக மட்டுமே இருக்கிறார்
தாங்கிய நிலமே விழுங்கியது.

தோண்டத் தோண்ட வரும் சடலங்கள்
மலைகள் புதைகிறது நம் கண்முன்னே
மரண ஓலம் கடவுளுக்கும் கேட்டிருக்கும்
எப்போது பதில் வந்தது.