அழகியசிங்கர்/க.சி.சிவகுமார் பற்றி சில வார்த்தைகள்..

க.சீ.சிவகுமாரின் சிறுகதைத் தொகுப்பான ‘என்றும் நன்மைகள்’ என்ற தொகுப்பை எடுத்து இன்று ஐந்து இலக்கிய நண்பர்கள் பேசத் தயாராக இருக்கிறார்கள்.

ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை தொடர் நிகழ்ச்சியாக ஒரு சிறு கதை ஆசிரியரின் கதைகளை எடுத்துப் பேசுகிறோம். இது 92 வது நிகழ்ச்சி. இதுவரை 142 சிறுகதை ஆசிரியர்களை எடுத்துப் பேசியிருக்கிறோம்.

இந்த முறை தற்செயலாக க.சீ சிவகுமார் ச கதைகளை எடுத்துப் பேசுகிறோம். முன்னதாக இந்த வாரம் மயிலன் ஜி சின்னப்பன் என்ற சிறுகதை ஆசிரியரின் கதைகளை எடுத்துப் பேசுவதாக இருந்தேன்.. அவரைத் தொடர்புகொள்ள இரண்டு இலக்கிய நண்பர்களிடம் தொலைபேசி எண் கேட்டு whatsappல் தகவல் அனுப்பினேன். அந்த இலக்கிய நண்பர்களிடமிருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை.
ஏன் என்று தெரியவில்லை. மயிலன் ஜி சின்னப்பன் அவர்களை நான் ஈமெயிலில் தொடர்பு கொண்டேன். அவரிடமிருந்தும் பதில் வரவில்லை.
பெரும்பாலும் நம்ம கதையை ஒருத்தர் பேசுகிறார் என்று கேட்டால் ஆர்வமாக அதில் கதாசிரியர்களும் ஈடுபடுவார்கள்.

என்னுடைய செய்தி சரியாகப் போகவில்லையா என்பது தெரியவில்லை.

க.சி சிவக்குமார் கதைகளை எடுத்துப் பேசுவது என்று தீர்மானித்தேன்.

‘என்றும் நன்மைகள்’ என்ற பெயரில் க.சி சிவக்குமார் சிறுகதைகள் ‘போதி வனம்’ பதிப்பகம் மூலம் 2021 ஆம் ஆண்டு வெளி வந்துள்ளது. இதன் விலை 130.

19 கதைகள் கொண்ட தொகுப்பு .

க.சீ.சி மெல்லிய நகைச்சுவை உணர்வுடன் கதைகளை எழுதி உள்ளார். கதைகளில் தன்னையும்
பகடி செய்து மற்றவர்களையும் பகடிசெய்திருக்கிறார். வட்டார மொழியில் எழுதி இருந்தாலும் வாசிக்க எந்தத் தடங்கலும் ஏற்படவில்லை.

கதையோட முக்கியமான அம்சமாக நான் கருதுவது கதையை அப்படியே விட்டுவிடுவது. பல எழுத்தாளர்கள் அப்படியே விட மாட்டார்கள். இவர் கதையை அப்படியே வாசகர்கள் முடிக்கும்படி விட்டு விடுகிறார்.

ஒரு கதை நான் குறிப்பாக சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். கரைதல் என்கிற ஒரு கதை. இந்தக் கதை எப்படி என்றால் கதைசொல்லியின் மாமா இறந்து விடுகிறார். கதைசொல்லியின் மாமா இறந்து விடுவதாக வருகிறது. சாவுக்கு கதைசொல்லியும், அம்மாவும் கலந்துகொள்ள போகிறார்கள். இந்தக் கதையைப் படிக்கும் போது தேவி பாரதியின் சாகித்திய அகாதெமி நாவலான ‘நீர்வழிப்படூஉம்’ என்ற நாவலை ஞாபகப் படுத்தியது. க.சீ.சி ‘கரைதல்’ சிறுகதையை முன்னதாகவே எழுதிவிட்டார். இதிலும் மரணத்தில் நடத்தப்படுகிற சடங்குகளைப் பற்றி விவரமாக எழுதி இருக்கிறார்.

இன்று மாலை 6.30 மணிக்கு க.சீ.சிவக்குமார் கதைகளை எடுத்துப் பேச உள்ளோம்.