ப.மதியழகன்/ஒழிந்த நேரத்தில் கவிதை எழுதுகிறேன்

அழகிய சிங்கரின் என்பா

ஒழிந்த நேரத்தில் கவிதை எழுதுகிறேன்
என் மனது எதிலும் நிலைகொள்ளவில்லை
நாட்களோ பறந்து கொண்டு இருக்கிறது
நித்திரையில் ஒடுங்கும் உலகு!

ஒழிந்த நேரத்தில் கவிதை எழுதுகிறேன்
விதியின் பிடியில் மாய உலகம்
கடவுளின் மரணத்துக்கு இரங்கற்பா எழுதுகிறேன்
எது இங்கு நிலையானது?

ஒழிந்த நேரத்தில் கவிதை எழுதுகிறேன்
தேடல் மட்டும் தான் வாழ்க்கை
தேடிக் கண்டுகொண்டவர் யார் இவ்வுலகில்
ஆறடி போதும் எனக்கு!

ஓழிந்த நேரத்தில் கவிதை எழுதுகிறேன்
விடியும் பொழுதுகள் நரகமாக இருக்கிறது
எழுதுகோல் மட்டுமே துணை எனக்கு
புத்தகங்கள் அலமாரியில் தூங்குகிறது!