பி.ஆர்.கிரிஜா/ஒழிந்த நேரத்தில் கவிதை எழுதுகிறேன்

அழகிய சிங்கரின் என்பா

ஒழிந்த நேரத்தில் கவிதை எழுதுகிறேன்
எண்ணிலடங்கா கவிஞர்கள் சொல் புதிதுவில்
கவிதை எழுதும் ஆசை விடவில்லை
முயற்சி வீண்
போகாதல்லவா !

********

ஒழிந்த நேரத்தில் கவிதை எழுதுகிறேன்
கவிதையின் மேல் உள்ள காதல்
எழுத முடியும் என்ற நம்பிக்கை
அதுவும் எனக்குக் கைகூடும் !

**********

ஒழிந்த நேரத்தில் கவிதை எழுதுகிறேன்
மனதில் தோன்றும் உணர்ச்சிகள் எழுத்தில்
மன அழுத்தத்தின் வடிகால் கவிதை
அது தருமே புத்துணர்ச்சி !


15/06/2024

One Comment on “பி.ஆர்.கிரிஜா/ஒழிந்த நேரத்தில் கவிதை எழுதுகிறேன்”

Comments are closed.